Published : 26 Dec 2021 10:37 AM
Last Updated : 26 Dec 2021 10:37 AM

ஆக்ராவில் கிறிஸ்துமஸ் தாத்தா உருவ பொம்மையை எரித்து இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு

ஆக்ராவில் சான்ட்டா கிளாஸ் உருவபொம்மையை எரிக்கும் முன் போாரட்டம் நடத்திய இந்துத்துவா அமைப்பினர் : படம் உதவி ட்விட்டர்


ஆக்ரா:உத்தரப்பிரதேசம் ஆக்ரா நகரில் நேற்று முன்தினம் கிறிஸ்துமஸ் தாத்தா உருவபொம்மை எரித்து இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன.

கிறிஸ்துமஸ் பண்டிகையைக் பயன்படுத்தி கிறிஸ்துவ மதத்தை பரப்ப வாய்ப்பாக பயன்படுத்துகிறார்கள் என்று இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டினர்.

அந்தாராஷ்டிரிய இந்து பரிஷத், ராஷ்ட்ரிய பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்தவர்கள், புனித நிகோலஸ் என்று அழைக்கப்படும் சான்டா கிளாஸ் உருவபொம்பையை ஆக்ராவில் உள்ள புனித ஜான்ஸ் கல்லூரி முன் தீயிட்டு கொளுத்தி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது ஏராளமான இலவசப் பொருட்கள், உடை, பணம், உணவுப்பொருட்கள் ஆகியவற்றை வழங்கி இந்துக்களை கிறிஸ்தவர்களாக மதம் மாற்ற கிறிஸ்துமஸ் பண்டிகையைப் பயன்படுத்துகிறார்கள் என்று இந்துத்துவா அமைப்பினர் குற்றம்சாட்டினர்.

அந்தாராஷ்டிரிய இந்து பரிஷத், ராஷ்ட்ரிய பஜ்ரங் தளம் அமைப்பின் செயலாளர் அஜ்ஜு சவுகான் கூறுகையில் “ கிறிஸ்தவ அமைப்புகள் நடத்தும் பள்ளிகளில் மாணவர்கள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுகிறார்கள்.

மாணவர்களை சான்டா கிளாஸ் போன்று உடை அணியக் கூறுகிறார்கள், மறுப்பவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். கிறிஸ்துவமஸ் பண்டிகையை வாய்ப்பாகப் பயன்படுத்தும் கிறிஸ்துவ அமைப்புகள் கிறிஸ்தவ மதத்தை பரப்ப பயன்படுத்துகிறார்கள். குடிசைப் பகுதிகளுக்குள் செல்லும் கிறிஸ்தவ அமைப்புகளை கண்காணித்து வருகிறோம்.

ஏழை இந்துக்களை மதம் மாற்றம் செய்கிறார்களா என்பதை கவனிக்கிறோம். அவ்வாறு செய்தால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x