Published : 26 Dec 2021 08:22 AM
Last Updated : 26 Dec 2021 08:22 AM
15 வயதுமுதல் 18 வயதுள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் மத்திய அரசின் முடிவை வரவேற்றுள்ள மருத்துவ வல்லுநர்கள், அடுத்ததாக 5 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது அடுத்த திட்டமாக இருக்க வேண்டும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்
பிரதமர் மோடி நேற்று மக்களுக்கு ஆற்றிய வரையி்ல், 2022 ஜனவரி 3ம்தேதி முதல் 15 வயதுமுதல் 18 வயதுள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். முதியோர்களுக்கும், முன்களப்பணியாளர்களுக்கும் பூஸ்டர் டோஸ் ெசலுத்தப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பை மருத்துவ வல்லுநர்கள் வரவேற்றுள்ளனர்.
டெல்லி கங்கா ராம் மருத்துவமனையின் நுரையீரல்சிகிச்சை நிபுணர் மருத்துவர் திரன் குப்தா கூறுகையில் “15 வயதுமுதல் 18வயதுள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் மத்திய அரசின் முடிவு வரவேற்கக்கூடியது. அடுத்ததாக 5 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை தொடங்க வேண்டும்.
குழந்தைகளுக்கான தடுப்பூசியைக் கொண்டுவர வேண்டும். 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தகளை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளையும் கவனத்தில் எடுக்க வேண்டும். அதுதான் அடுத்த திட்டம்.
முன்களப்பணியாளர்களுக்கு ஏன் ஜனவரி 10ம் தேதியிலிருந்து தொடங்க வேண்டும். ஒமைக்ரான் வேகமாகப் பரவிவருவதால், உடனடியாகக்கூடதொடங்கலாம். ஒவ்வொரு நாளும் முக்கியமானதுதான். வைரஸில் உருமாற்றம் நிகழ்ந்து வருவதால், பூஸ்டர் டோஸை விரைந்து எடுக்க வேண்டும்.
பூஸ்டர் டோஸ் செலுத்திய 3 வாரங்களுக்குப்பின் உடலில் போதுமான நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகிவிடும். ஆதலால் அடுத்த சில நாட்களில் கூடபூஸ்டர் டோஸை மத்திய அரசு தொடங்கலாம். விரைந்து தொடங்குவது அடுத்த அலை வராமல் தடுக்கும், தள்ளப்போட முடியும்”
இவ்வாறு திரன் குப்தா தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT