Last Updated : 20 Dec, 2021 05:09 PM

 

Published : 20 Dec 2021 05:09 PM
Last Updated : 20 Dec 2021 05:09 PM

தர்மபுரியில் மூத்த குடிமக்கள் முகாம்: மத்திய அமைச்சர் வீரேந்திரகுமாரிடம் செந்தில்குமார் மனு

புதுடெல்லி: தர்மபுரியில் மூத்த குடிமக்கள் முகாம் நடத்தி உதவி உபகரணங்கள் வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இதற்கானக் கடிதத்தை மத்திய சமூகநீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் வீரேந்திரகுமாரை நேரில் சந்தித்து திமுக எம்.பி டாக்டர்.டி.என்.வி.செந்தில்குமார் அளித்தார்.

இதுகுறித்து நாடாளுமன்ற மக்களவையின் தர்மபுரி தொகுதி எம்.பி.யான டாக்டர். செந்தில்குமார் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:

கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது கோரிக்கையை ஏற்று தர்மபுரியில் மாற்றுத் திறனாளிகளுக்காக ஏடிஐபி முகாம் நடத்தப்பட்டது.

அதன் மூலம் மாற்றுத்திறனாளி பயனாளிகள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய மத்திய அமைச்சகத்துக்கு நன்றி. இந்த உதவிகள், தர்மபுரியின் மற்ற சட்டப்பேரவை தொகுதிகளிலும் அவசியப்படுகிறது.

நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேட்டூர் சட்டப்பேரவை தொகுதியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மாற்றுத்திறனாளி மக்களுக்கு விடுபட்ட ஏடிஐபி முகாம் நடத்தி உதவி உபகரணங்கள் வழங்க வேண்டும்.

பென்னாகரம், பாலக்கோடு அரூர் பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட ஆறு சட்டபேரவை தொகுதிகளிலும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மூத்த குடிமக்கள் அதிகம் உள்ளனர். இவர்களுக்காகவும் அந்த முகாம் நடத்தி உதவி உபகரணங்கள் வழங்க சம்பந்தப்பட்டவர்களை பணிக்க வேண்டும்.

தர்மபுரி மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பதால் மூத்த குடிமக்கள் நலனுக்கான தேசிய வயோ ஸ்ரீ திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டத்தை நியமனம் செய்ய வேண்டும்.

முகாம்களை நடத்த தேவையான அனைத்து உதவிகளையும் பயிற்சி பெற்ற மருத்துவ பயிற்சியாளர் என்ற முறையில் நான்

வழங்கத் தயாராக உள்ளேன். இம்முகாம் நடத்தப்பட்டால் மூத்தகுடிமக்கள் அனைவரு பயன்பெறுவார்கள்.

எனவே, மத்திய அரசு தனது மேம்பாட்டுத்துறையின் சார்பிலான முகாம்களை உடனடியாக நடத்த வேண்டும்.

இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x