Published : 20 Dec 2021 10:17 AM
Last Updated : 20 Dec 2021 10:17 AM
புதுடெல்லி: பாகிஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்ட 77 கிலோ ஹெராயின் போதைப் பொருட்களை, குஜராத் கடற்படைப் பாதுகாப்புப்படையினர் மடக்கிப் பிடித்தனர் என்று தகவல்கள் தெரிவி்க்கின்றன
குஜராத் கடலோர காவல் படையினரும், குஜராத் தீவிரவாதத் தடுப்புப் படையினரும் இணைந்து இன்று பாதுகாப்பு மற்றும் திடீர் ஆப்ரேஷனில் ஈடுபட்டனர். அப்போது, அல் ஹூசைனி என்ற பெயருடைய படகு குஜராத் கடற்பகுதிக்குள் வருவதைப் கடலோர பாதுகாப்புப்படையினர்பார்த்தனர்.
இதையடுத்து, அந்தப் படகை சுற்றி வளைத்த கடலோர பாதுாப்பு படையினர், தீவிரவாத தடுப்புப்படையினர் அந்தபடகை ஆய்வு செய்தனர். அந்தப்ப டகில் பாகிஸ்தானைச் சேர்ந்த 6 பேர் இருந்தனர் அதில் 77 கிலோ ஹெராயின் போதைப்பொருள் இருந்தது இதையடுத்து, படகில் இருந்த 6 பேரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படனர். அந்த ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செயய்ப்பட்டது.
இது குறித்து குஜராத் பாதுகாப்புத்துறை ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “குஜராத் கடலோர காவல்படை, குஜராத் தீவிரவாததடுப்புப்படை இணைந்து நடத்திய சோதனையில், அல் ஹூசைனி என்ற படகு சிக்கியது. அதில் 6 பாகிஸ்தானியர்கள் இருந்தனர்,
அந்தப் படகில் 77 கிலோ ஹெராயின் போதைப்பொருள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.400 கோடியாகும். இந்தப் படகு ஜகு பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முன் கடந்த ஏப்ரல் 15ம் தேதி பாகிஸ்தான் படகில் கடத்தி 33 கிலோ ஹெராயின் போதைப் பொருள்கடத்தி வரப்பட்டு அது இந்திய கடற்படையினரால் பிடிக்கப்பட்டது. அதன் சர்வேதசமதிப்பு ரூ.300 கோடியாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT