Published : 20 Dec 2021 07:42 AM
Last Updated : 20 Dec 2021 07:42 AM
புனே: பிரிட்டனில் ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்து அச்சம் தெரிவித்த எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா, “ எந்தச் சூழலையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்”எனத் தெரிவித்தார்
தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24ம் தேதி கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் அடுத்தடுத்து பல்வேறு நாடுகளுக்கும் பரவி 70க்கும் மேற்பட்ட நாடுகளுக்ககு மேல் பரவிவிட்டது.
இதனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன், கனடா உள்ளிட்ட பல நாடுகள் தென் ஆப்பிரி்க்கா, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும்பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன சில நாடுகள் தடையும் விதித்துள்ளன.
கரோனா வைரஸில் மோசமான விளைவுகளை ஏற்படுத்திய டெல்டா வைரஸைவிட, ஒமைக்ரான் வைரஸ் வேகமாகப் பரவுகிறது என்றும், பாதிப்பின் அளவில் லேசான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது என்றும் முதல் கட்ட புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்தது.
அதுமட்டுமல்லாமல் கரோனாவில் பாதிக்கப்பட்டு அதனால் கிடைத்த நோய் எதிர்ப்புச்சக்தி, தடுப்பூசி மூலம் கிடைத்த நோய் எதிர்ப்புச்சக்தியையும் இந்த ஒமைக்ரான் வைரஸ் குறைத்து விடுகிறது, அல்லது அழித்துவிடுகிறது என்றும் கூறப்பட்டது. ஆனால், அதிகமான புள்ளிவிவரங்கள் ஏதும் கிடைக்காததால் அறிவியல் வல்லுநர்கள் உறுதியான தகவலை ஏதும் கூறவில்லை.
பிரிட்டனில் நாளுக்கு நாள் கரோனா, ஒமைக்ரானில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாள்தோறும் சராசரியாக 80 ஆயிரம் பேர் தொற்றால்பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை பிரி்ட்டனில் மட்டும் 37ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஒமைக்ரானில் பாதி்க்கப்பட்டுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக அந்நாட்டில் கரோனா பாதிப்பு 1.13 கோடியாக அதிகரித்துள்ளது.அதிலும் வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக 93 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டது.
இந்நிலையில் பிரிட்டனில் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் டெல்டா வைரஸ் பரவும்போது இதேபோன்றுநிலை இருந்தது. இந்தியாவில் பரவாது என்று நினைத்திருந்தபோது, கடந்த மார்ச் முதல் மே மாதம் வரை இந்தியாவில் 2-வது அலை மக்களை கொத்துக்கொத்தாக காவு வாங்கியது.
இதனால் பிரிட்டனில் ஏற்பட்டுவரும் ஒமைக்ரான் பாதிப்பு இந்தியர்களுக்கு சற்று பீதியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து எய்ம்ஸ் இயக்குநர் மருத்துவர் ரன்தீப் குலேரியா, புனேயில் நேற்று பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில் “ பிரி்ட்டனில் ஒமைக்ரான் பாதிப்பு, கரோனா தொற்று அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. நாம் எந்தச் சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். ஆனால், பிரி்ட்டனில் சூழலை மோசமான அளவுக்குச் செல்லாது என்று நம்புகிறேன்.
ஒமைக்ரான் வைரஸ் குறித்து அதிகமான புள்ளிவிவரங்கள் தேவைப்படுகிறது. உலகில் மற்றநாடுகளில் ஒமைக்ரான் பரவலையும் தொடர்ந்து நாம் கண்காணிப்பது அவசியம். எதற்கும் தயாாரக இருப்போம். எதற்கும் தயாராக இருப்பது என்பதைவிட, ஒமைக்ரானைவரவிடாமல் தடுக்கும் வகையில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT