Last Updated : 17 Dec, 2021 03:06 AM

6  

Published : 17 Dec 2021 03:06 AM
Last Updated : 17 Dec 2021 03:06 AM

மத்திய அமைச்சர் பதவியில் இருந்து அஜய் மிஸ்ராவை நீக்கும் எண்ணம் இல்லை: பாஜக வட்டாரங்கள் தகவல்

புதுடெல்லி: லக்கிம்பூர் கெரி விவகாரத்தில் அஜய் மிஸ்ராவை மத்திய உள்துறை இணை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் அமளி தொடர்கிறது. உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல் காரணமாக அவரை நீக்கும் நோக்கம் பாஜக தலைமைக்கு இல்லை எனவும் தெரியவந்துள்ளது.

உ.பி.யின் லக்கிம்பூர் கெரியில் ஆர்பாட்டம் செய்ய வந்த விவசாயிகள் மீது வாகனங்கள் மோதியதில் 4 விவசாயிகள் உள்ளிட்ட ஐந்து பேர் பலியானர். அக்டோபர் 3-ல் நடைபெற்ற இச்சம்பவம் விபத்தல்ல, திட்டமிட்ட கொலை எனப் புகார் எழுந்திருந்தது. இதன் மீது உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்தது. இதனால், மத்திய உள்துறை இணை அமைச்சரான அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழு(எஸ்ஐடி), அது திட்டமிட்ட சதி என நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது.

இதையடுத்து, தன் தந்தையான மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா அறிவுறுத்தலால் இதை, மகன் ஆஷிஷ் மிஸ்ரா செய்தார் எனப் புகார் கிளம்பி விட்டது. இதன் தார்மீகப் பொறுப்பில் அஜய் மிஸ்ரா தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் குரல் கொடுக்கத் துவங்கி விட்டன. இவர்கள், நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரையும் நடத்த விடாமல் அமளி செய்து வருகின்றனர்.

இப்பிரச்சினை உ.பி.யில் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலிலும் எதிரொலிக்கும் வாய்ப்புகள் உள்ளன. எனினும், பாஜகவின் தலைமை அஜய் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்கும் நோக்கில் இல்லை எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் நிலையில் அமைச்சர் பதவியிலிருந்து அஜய் மிஸ்ராவை நீக்க முடியாது என மத்திய அரசு காரணமும் கூறி வருகிறது. எனினும், இதன் பின்னணியில் பாஜக அஜய் மிஸ்ரா விவகாரத்தில் தனது வெற்றியையே பணயம் வைக்கத் தயாராகி விட்டதாகவும் கருதப்படுகிறது.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் உ.பி. பாஜக நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ‘‘இச்சுழலில் அமைச்சர் பதவியிலிருந்து அஜய் மிஸ்ராவை நீக்கினால் அவர் மீதான புகார் உண்மை என்றாகி விடும். எஸ்ஐடியின் புலனாய்வு இறுதியல்ல. அதன் மீதான வழக்கின் விசாரணையிலும் முடிவுகள் மாறும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, தீர்ப்பிற்காக காத்திருந்தபடி தேர்தல் பிரச் சாரத்தை பாஜக தொடரும்’’ எனத் தெரிவித்தனர்.

தந்தையை தண்டிக்க முடியாது

நேற்று முன்தினம் லக்னோ வந்தவரிடம் ஒரு செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அஜய் மிஸ்ரா கடுமையான வார்த் தைகளுடன் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். இந்த சம்பவத்தில் அமைச்சர் அஜய் மிஸ்ராவை கண்டித்த பாஜக தலைமை வரும் நாட்களில் இதுபோல் நடைபெறாமல் கவனமாக இருக்கும்படியும் எச்சரித்துள்ளது. லக்கிம்பூர் கெரி விவகாரத்தில் அவரது மகன் தவறு செய்திருந்தாலும் அதற்காக தந்தையை தண்டிப்பது நியாய மல்ல எனவும் பாஜக தலைமை கருதுவதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x