Published : 16 Dec 2021 07:53 AM
Last Updated : 16 Dec 2021 07:53 AM

2024 தேர்தலில் பாஜக தோற்கும்; மே.வங்கம் சிந்தித்ததை நாளை இந்தியா சிந்திக்கும்: மம்தா பானர்ஜி விருப்பம்

கொல்கத்தாவில் நேற்று நடந்த கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசிய காட்சி |படம் ஏஎன்ஐ


கொல்கத்தா: 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நாடுமுழுவதும் பாஜக தோற்கும், அதைக் காண விரும்புகிறேன் என்று மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விரும்பம் தெரிவி்த்துள்ளார்.

கொல்கத்தாவில் வரும் 19-ம் தேதி மாநகராட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நேற்று முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

2024ம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக நாடுமுழுவதும் தோற்கும். அந்தக் காட்சியைக் காண விரும்புகிறேன். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மே.வங்கத்தில் பாஜக சந்தித்த அதேநிலையை நாடுமுழுவதும் சந்திக்கும்.

நான் 3-வதுமுறையாக மே.வங்கத்துக்கு முதல்வராகி இருக்கிறேன். இந்த முறை என்னுடைய நோக்கம் மாநிலத்தில் தொழிற்சாலைகள்,தொழில்களை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதுதான் பிரதான நோக்கம்.

சட்டப்பேரவைத் தேர்தலின்போது , பாஜக மாநிலம்முழுவதும் தீவிரமான பிரச்சாரம் செய்ததைப் பார்த்தோம். அவர்களைப் பார்த்து ஒவ்வொருவரும் அஞ்சினார்கள். ஆனால், இந்த மாநிலத்தின் மக்கள் பாஜகவினரைத் தோற்கடித்துள்ளார்கள். சமூக நல்லிணக்கத்துக்கான இடம் மேற்குவங்கம்.

இன்று மேற்குவங்கம் சிந்தித்ததைத்தான்நாளை இந்தியா சிந்திக்கும். பாஜகவை 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நாம் தோற்கடிப்போம். சட்டப்பேரவைத் தேர்தலில் இங்கு பாஜகவுக்கு ஏற்பட்ட இதே நிலை, நாடுமுழுவதும் ஏற்படும்.

நாடுமுழுவதும் பாஜக தோற்பதைக் காண விரும்புகிறேன். மீண்டும் மிகப்ெபரிய விளையாட்டு நடக்கும். கோவா, திரிபுராவில் திரிணமூல் காங்கிரஸ் தடம் பதித்திருக்கிறது. நாம் ஏராளமான தடைகளையும், சிரமங்களையும் அங்கு சந்திக்கிறோம்.

கொல்கத்தா நகராட்சி தேர்தலில் போட்டயிடும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்கள் மக்களின் குறைகளை தீர்்க்க போராடுபவர்களாக இருக்க வேண்டும், குறைகளைக் கேட்கக்கூடியவர்களாக இருக்கவேண்டும். பலகவுன்சிலர்கள் செயல்பாடு சரியில்லை என்பதால், இந்த முறை அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

எம்.பி., எம்எல்ஏ யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. மக்கள் பிரதிநிதிகள் தங்களுக்குரிய பகுதியில் பணியாற்றி வேண்டும். கவுன்சிலர்கள் தங்களின் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். நீங்கள் உங்கள் பணியைச் செய்யாவிட்டால் கீழே இறக்கப்படுவீர்கள். மக்கள் பிரச்சினைகளுடன் உங்களைச் சந்திக்கவந்தால், அவர்களிடம் பிரச்சினைகளைக் கேட்டு தீர்த்துவையுங்கள் பணம் கேட்பதை ஏற்க முடியாது

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x