Last Updated : 14 Dec, 2021 11:04 AM

 

Published : 14 Dec 2021 11:04 AM
Last Updated : 14 Dec 2021 11:04 AM

நெதர்லாந்திலுள்ள சோழர் கால சாசனங்களை மீட்கும் பணி துவக்கம்: கனிமொழி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

புதுடெல்லி

நெதர்லாந்து நாட்டிலுள்ள லைடன் பல்கலைக் கழகத்திலுள்ள சோழ மன்னர்களின் பழங்கால சாசனங்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது.

இந்தத் தகவலை இன்று மக்களவையில் திமுக எம்.பி கனிமொழியின் கேள்விக்கு மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி அளித்த பதிலில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற மக்களவை திமுக குழுத் துணைத்தலைவரான கனிமொழி எழுப்பிய கேள்வியில், ‘நெதர்லாந்து நாட்டிலுள்ள லைடன் பல்கலைக் கழகத்தில் நமது சோழமன்னர்களின் பழங்கால சாசனங்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.

இவை, ’லைடன் ப்ளேட்ஸ்’ என்று அழைக்கப்படுகின்றன. அவற்றை மீட்டு நம் நாட்டுக்கு கொண்டுவருவதற்கு ஒன்றிய அரசு ஏதேனும் நடவடிக்கைகள் எடுத்துள்ளதா? எடுத்திருந்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?’ எனக் கேட்டிருந்தார்.

இதற்கு மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டி அளித்த பதிலில், ’லைடன் பல்கலைக் கழகத்தில் இருக்கும் சோழ மன்னர்களின் சாசனங்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன

இது, நமது நாட்டின் தொல்லியல் துறை மூலம், நெதர்லாந்து அரசுடன் தகுந்த மட்டத்தில் நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன.’ என்று அவர் குறிப்பிட்டார்.

நெதர்லாந்தில் சோழர் காலத்தின் மொத்தம் இரண்டு சாசனங்கள் சிக்கியுள்ளன. இவை சோழர்களின் ஆட்சிக் காலத்தின் 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை.

சாசனங்கள் விவரம்:

இதில் ஒன்று பெரியதாகவும் மற்றொன்று சிறியதாகவும் உள்ளது. இது மலேயாவின் ஸ்ரீவிஜயன் எனும் மன்னன், தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கு வரும் தம் நாட்டினர் தங்குவதற்காக ஒரு புத்தவிஹார் கட்டித்தர சோழ மன்னர் ராஜராஜனிடம் கேட்டிருந்தார்.
இக்கோரிக்கையை ஏற்ற மன்னர் ராஜராஜன் நாகப்பட்டினத்தின் ஆனைமங்கலம் எனும் கிராமத்தை அளிக்கிறார். இதன் விவரங்கள் முதல் சானசத்தில் எழுதப்பட்டுள்ளன. இரண்டாவது சிறிய சாசனம், முதலாம் குலோத்துங்கன் காலத்தியது ஆகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x