Published : 14 Dec 2021 10:21 AM
Last Updated : 14 Dec 2021 10:21 AM
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,784 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 252 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 5,784.
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,47,03,644
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 7,995.
இதுவரை குணமடைந்தோர்: 3,41,38,763.
நோயிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.36% என்றளவில் உள்ளது. இது கடந்த 2020 மார்ச் மாதத்திற்குப் பின் மிக அதிகமானது.
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 252.
கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,75,888.
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 88,993.
வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் 0.78% ஆக உள்ளது. இது கடந்த 23 நாட்களாக 1%க்கும் கீழ் உள்ளது.
தினசரி பாசிடிவிட்டி விகிதம் 0.94% ஆக உள்ளது. இது கடந்த 63 நாட்களாக 2%க்கும் கீழ் உள்ளது.
பாசிடிவிட்டி ரேட் என்பது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று இருக்கிறது என்பதை உறுதி செய்யும் கணக்கீடு.
இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 133.8 கோடி.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இப்போது வரை 41 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT