Last Updated : 13 Dec, 2021 02:55 PM

 

Published : 13 Dec 2021 02:55 PM
Last Updated : 13 Dec 2021 02:55 PM

வாரணாசியில் தலைப்பாகை, காவித்துண்டு அணிந்து மக்களுடன் கலந்து மகிழ்ந்த பிரதமர் மோடி

புதுடெல்லி

உத்தரப்பிரதேசம் வாரணாசியில் ரூ.339 கோடி செலவிலான காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை பிரதமர் நரேந்தர மோடி துவக்கி உள்ளார். இதற்காக வந்தவருக்கு சாலையில் மறித்து அளிக்கப்பட்ட தலைப்பாகை, காவித்துண்டை அணிந்து மக்களுடன் கலந்து மகிழ்ந்தார்.

உ.பி.யின் வாரணாசியிலுள்ள காவிவிஸ்வநாதர் கோயிலிலிருந்து கங்கை கரைக்கு நேரடியாக செல்ல சிறப்பு பாதை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.339 கோடி செலவில் அமைந்ததை துவக்கி வைக்க பிரதமர் நரேந்தர மோடி இன்று இரண்டு நாள் பயணமாக வாரணாசி வந்துள்ளார்.

தம் மக்களவை தொகுதியான வாரணாசிவாசிகள் பிரதமரை வழிநெடுக கூடி நின்று ரோஜா மலர்களை தூவி வரவேற்றனர். இதில், தன்ச் தெருவின் பாதுகாப்பு வளையத்திற்குள் நுழையும் வகையில் ஒரு சாது திடீர் என சாலையில் இறங்கினார்.

அவரது கைகளில் பிரதமருக்கு அணிவிக்க என சிகப்புநிறத் தலைப்பாகையும், காவிநிறத்துண்டும் இருந்தது. முன் அனுமதியின்றி வந்த சாதுவை, மடக்கிய பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை வெளியேற்ற முயற்சித்தனர்.

இதை சற்று தொலைவிலிருந்து முன் இருக்கையில் அமர்ந்தபடி தனது வாகனத்தில் வந்த பிரதமர் மோடி கவனித்து விட்டார். பிறகு வாகனத்தை நிறுத்தக் கூறி பாதுகாப்பு அதிகாரிகளை தடுத்து அந்த சாதுவை அவர் அனுமதிக்கும்படி உத்தரவிட்டார்.

இதனால், மகிழ்ந்த சாதுவின் கைகளில் தலைப்பாகையை வாங்கிய பிரதமர் மோடி அதே மகிழ்ச்சியுடன் அணிந்து கொண்டார். காவித்துண்டையும் அணிந்தவர் கைகூப்பி அங்கிருந்த தன் தொகுதி வாசிகளை வணங்கி மகிழ்ந்தார். இந்த காட்சி அங்கிருந்தவர்களால் வீடியோ பதிவாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த விடோயோ பதிவை தனது ட்விட்டரில் பதிவேற்றம் செய்த பிரதமர் மோடி, ‘‘காசியை அடைந்த பெருமகிழ்ச்சி கொண்டேன். விரைவில் காசிவிஸ்வதாருக்கான திட்டத்தை நாட்டிற்கு அர்பணிக்க உள்ளேன். இதற்கு முன்பாக நான் பாதுகாவலரான காலபைரவரையும் தரிசித்தேன்.’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x