Published : 12 Dec 2021 10:33 AM
Last Updated : 12 Dec 2021 10:33 AM
ஒருவர் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் மூலம் அவருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை 2 மணிநேரத்தில் கண்டறியும் பரிசோதனைக் கிட்(கருவி)டை ஐசிஎம்ஆர் ஆய்வாளர்கள் குழு வடிவமைத்துள்ளனர்.
தற்போதுள்ள முறையின்படி ஒருவர் உடலில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு அது மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு அங்கு கண்டறியப்படும். இதற்கு 3 நாட்கள்வரை ஆகலாம். ஆனால், இந்த நவீன கிட் மூலம் 2 மணிநேரத்தில் கண்டறிய முடியும்
அறிவியல் வல்லுநர் மருத்துர் பி்ஸ்வஜோதி போர்காகோட்டி தலைமையிலான வடகிழக்கு மண்டல மருத்துவக் குழுவினர் இந்த புதிய கிட்டை வடிவமைத்துள்ளனர்
இதுகுறித்து மருத்துவர் பி்ஸ்வஜோதி போர்காகோட்டி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “ ஐசிஎம்ஆர்- மற்றும் திப்ருகார்கில் உள்ள ஆர்எம்ஆர்சி இணஐந்து, ஆர்சிபிசிஆர் கருவியுடன் இணைந்த புதிய பரிசோதனைக் கருவியைக் கண்டறிந்துள்ளோம். இதன் மூலம் ஒமைக்ரான் பாதிப்பு இருக்கிறதா இல்லையா என்பதை 2மணிநேரத்தில் தெரிந்துவிடும்.
ஆனால் வழக்கமாக மரபணு பரிசோதனை மூலம் கண்டறியவேண்டுமென்றால், குறைந்தபட்சம் 36மணிநேரம் தேவைப்படும். சில நேரங்களில் 4 முதல் 5 நாட்கள்வரைகூட ஆகலாம். ஆனால், இந்த பரிசோதனைக் கிட் மூலம் 2 மணிநேரத்தில் ஒமைக்ரான் பாதிப்பு இருக்கிறதா என்பது தெரிந்துவிடும்
கொல்கத்தாவைச் சேர்ந்த மருந்து நிறுவனமான ஜிசிசி பயோடெக், இந்த கருவியை அரசு மற்றும் தனியார் பங்களிப்பு திட்டம் மூலம் தயாரித்து வருகிறது. ஒரு உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் கரோனா வைரஸின் உருமாறிய ஒமைக்ரான் வைரஸின் ஸ்பைக் புரதம் இருக்கிறதா என்பது இந்தக் கருவியில் தெரியவரும். இதன் முடிவுகள் 100 சதவீதம் சரியாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்
மருத்துவ ஆய்வாளர் பி்ஸ்வஜோதி போர்காகோட்டி தலைமையிலான மருத்துவக் குழுவினர்தான், கடந்த ஆண்டு ஜூலை மாதம் சார்ஸ்-கோவிட் வைரஸை வெற்றிகரமாகப் பிரித்தெடுத்தனர். திப்ருகார்கில் உள்ள இந்த ஐசிஎம்ஆர்-ஆஎம்ஆசி ஆய்வகம்தான் சார்ஸ்-கோவிட் வைரஸை வெற்றிகரமாக பிரித்தெடுத்த 3-வது ஆய்வகமாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT