Published : 11 Dec 2021 09:53 AM
Last Updated : 11 Dec 2021 09:53 AM
உலகளவில் பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ் காரணமாக 2022ம் ஆண்டில் இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரி்க்கும் வாய்ப்புள்ளது என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
ஹரியானா சோனாபட்டில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தின் சார்பில் நேற்று நடந்த இணையதள கலந்துரையாடல் மூலம் பல்ேவறு மருத்துவர்கள் வல்லுநர்கள் பங்கேற்றபோது, அதில் இதில் கருத்து முன்வைக்கப்பட்டது.
தற்போது இந்தியாவில் தினசரி 10ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுவருகிறார்கள், 88 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனில் தற்போது கரோனா வைரஸின் 4-வது அலையின் தாக்கம் இருந்து வருகிறது. அந்நாட்டின் மருத்துவச் செயலர் சஜித் ஜாவித் அளித்த பேட்டியி்ல் “ இந்த மாத இறுதியில் பிரிட்டனில் கரோனாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 10 லட்சத்துக்கு மேல் அதிகரிக்கும்” எனத் தெரிவித்துள்ளார். இஸ்ரேல், பிரிட்டனில் ஏற்பட்ட தாக்கத்தால் அடுத்த ஆண்டு இ்ந்தியாவிலும் கரோனா பாதிப்பு அதிகரிக்கும்.
அசோக பல்கலைக்கழகத்தின் சார்பில் நடந்த இணையதளக் கலந்துரையாடலில், திரிவேதி ஸ்கூல் ஆப் பயோசயின்ஸ், இயக்குநர் ஷாகித் ஜமீல், இயற்பியல், பயோலஜி பேராசிரியர் கவுதம் மேனன் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது ஷாகித் ஜமீல் கூறுகையி்ல் “ கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தடுப்பூசி தவிர்த்து, முக்ககவசம் அணிதல், மூடப்பட்ட அறையில் கூட்டமாக இருப்பதைத் தவிர்த்தல், சமூக விலகல் போன்றவை மிகவும் அவசியம்.
ஒமைக்ரான் வைரஸ் கண்டுபிடிப்பதற்கு முன்இந்தியாவி்ல் இருந்த சூழலைப் பார்த்தால், 2022ம் ஆண்டிலிருந்து மக்கள் கரோனா வைரஸுக்கு முன்பிருந்த இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிடுவார்கள் என்று எண்ணப்பட்டது. ஆனால், இந்த வாய்ப்பு ஒமைக்ரான் வைரஸால் குறைந்து வருகிறது. அடுத்த ஆண்டு இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரி்க்கும் எனத் தோன்றுகிறது.
ஒமைக்ரான் வைரஸ் ஏராளமான உருமாற்றங்களுடன் வந்துள்ளது. இதுவரை உருவான கரோனா வைரஸ்களிலேயே அதிகமான மாற்றங்களுடன்இருக்கிறது.அதனுடைய ஸ்பைக் புரதத்தில் 32 மாற்றங்கள் உள்ளன. இதன் காரணமாகவே டெல்டா வைரஸைவிட, அதிவேகமாக பரவும் தன்மையாக ஒமைக்ரான் மாறியுள்ளது.
தற்போது கிைடத்த புள்ளிவிவரங்கள்படி 63 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது. ஒமைக்ரான் வைரஸின் இயல்பு என்பது, வேகமாகப் பரவும், தொற்றின் தீவிரம் இருக்கும், உடலில் கரோனா வைரஸாலும், தடுப்பூசியாலும் ஏற்பட்ட நோய் எதிர்ப்புச் சக்தியை அழித்துவிடும் என்று முதல்கட்ட ஆதாரங்கள் வாயிலாகத் தெரியவருகிறது.
தென் ஆப்பிரிக்க ஆய்வகங்கள், ஃபைஸர் நிறுவனத்தின் ஆய்வகங்களின் முடிவின்படி, மூன்றாவது டோஸ் எடுப்பதால் ஒமைக்ரானிலிருந்து தப்பிக்க முடியும். குறிப்பாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி மூலம் நோய் எதிர்ப்புச்சக்தியின் அளவை அதிகரித்து, தொற்றின் தீவிரத்தைக் குறைக்க முடியும் என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. ஆதலால் இந்தியா தற்போது பூஸ்டர் தடூப்பூசி செலுத்த வேண்டிய அவசியத்தையும், குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டிய தேவையையும் கவனிக்க வேண்டும்
தென் ஆப்பிரிக்காவில் உருவாகிய ஒமைக்ரான் பெரிய பாதிப்பை அந்நாட்டில் ஏற்படுத்த தொடங்கியுள்ளது, வரும் வாரங்களில் இன்னும் அதிகமாகத் தெரியவரும். தற்போது கிைடத்துள்ள தகவலின்படி வேகமாகப் பரவும் ஒமைக்ரான் வைரஸ், நோய் எதிர்ப்புச் சக்தியை அழிக்கிறது, ஆனால், டெல்டா வைரஸ் போன்று தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தவில்லை எனத் தெரியவருகிறது. ஆனால், அதை உறுதிசெய்யவும் அதிகமான புள்ளிவிவரங்கள் தேவை.
இவ்வாறு ஜமீல் தெரிவி்த்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment