Last Updated : 10 Dec, 2021 03:06 AM

1  

Published : 10 Dec 2021 03:06 AM
Last Updated : 10 Dec 2021 03:06 AM

ஹஜ் யாத்திரை மானியம் அரசியல் மோசடி: மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வீ விளக்கம்

புதுடெல்லி

முஸ்லிம்களின் ஹஜ் புனித யாத்திரைக்கு மத்திய அரசு அளித்த மானியம் ரத்து செய் யப்பட்டது குறித்து மக்களவையில் நேற்று பகுஜன் சமாஜ் எம்.பி. தானிஷ் குன்வார் அலி மற்றும் காங்கிரஸின் அப்துல் காலீத் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.

அதற்கு மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வீ பதில் அளிக்கையில், ‘‘பல வருடங்களாக முஸ்லிம்களின் புனித ஹஜ் யாத்திரைக்கு அளிக்கப் பட்டு வந்த மானியம் என்பது ஒரு அரசியல் மோசடியாகும். தற்போது பிரதமர் நரேந்திர மோடி அரசால் மானியம் ரத்தான பின்பு பயணக் கட்டணம் மிகவும் குறைந்துள்ளது’ எனத் தெரிவித்தார்.

மேலும் நக்வீ அளித்த பதிலில், ‘‘மானியம் அமலிலிருந்த போது நகரிலிருந்து ஒருவர் செல்ல பயணக் கட்டணம் ரூ.1.97 லட்சம் இருந்தது. இது தற்போது மானியம் இல்லாமல் ரூ.87,000 என்றாகி விட்டது. மற்ற நகரங்களிலிருந்தும் ஹஜ்ஜுக்கான பயணக் கட்டணம் வெகுவாகக் குறைந்துள்ளது. இதற்கு பிரதமர் மோடி அரசின் நல்லெண்ணமே காரணம்’’ என்றார்.

மற்றொரு கேள்விக்கு அமைச் சர் நக்வீ பதிலளிக்கையில், ‘கரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக ஹஜ் பயணம் நடைபெறவில்லை. இந்த வருடமும் சவுதி அரசின் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை பொறுத்து முடிவு எடுக்கப்படும். ஹஜ் பயணிகள் புறப்படும் இடங்களை அதிகரிப்பது குறித்து சவுதி அரசுடன் செய்து கொள்ளும் உடன்படிக்கையின்படி முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.

மத்திய அரசின் ஹஜ் கமிட் டிக்கானத் தேர்தல் இன்னும் நடை பெறவில்லை. தேர்தல் நடத்துவது குறித்தும் அமைச்சர் நக்வீயிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர், ஹஜ் கமிட்டி தேர்தல் மீதான வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளதால், கருத்து கூற இயலாது என பதிலளித்தார்.

ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும் தங்கள் மதத்தின் கடமைகளில் ஒன்றாக ஹஜ் புனித யாத்திரை உள்ளது. ஆனால், விமானத்தில் செல்ல பயணக் கட்டணம் உட்பட செலவுகள் அதிகம். இதனால் ஹஜ் யாத்திரைக்கு மத்திய அரசு மானியம் அளித்து.

இந்த மானியம், மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி வந்த பின் கடந்த ஜனவரி 2018-ல்ரத்து செய்யப்பட்டது. இதை மீண்டும் அளிக்க வேண்டும் என முஸ்லிம்கள் தரப்பில் எந்த கோரிக்கையும் எழுந்ததாகத் தெரியவில்லை. எனினும், தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட சில மாநில அரசுகளிடமிருந்து மத்திய அரசிடம் கோரிக்கை எழுந்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x