Published : 08 Dec 2021 08:24 AM
Last Updated : 08 Dec 2021 08:24 AM

பஞ்சாப்பில் காங்கிரஸை காலி செய்யும் முயற்சி : பொறுப்பாளர் நியமனத்தில் கொம்பு சீவும் அமரிந்தர் சிங்

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் | கோப்புப்படம்

சண்டிகர் 


பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் சட்டப் பேரைவத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சிக்குவரவிடக்கூடாது என்ற முயற்சியில் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் தீவரமாகச்செயல்பட்டு வருகிறார்.

பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அஜெய் மாகென், 1984ம் ஆண்டு சீக்கியக் கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்ட முக்கியக் குற்றவாளியின் மருமகன் என்று மக்களிடையே கொம்புசீவிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவராகவும், பஞ்சாப் முதல்வராகவும் இருந்த அமரிந்தர் சிங் கட்சித் தலைைமயிடமும், மாநில தலைவர் சித்துவுடன் ஏற்பட்ட மோதல் காரணாக முதல்வர் பதிவியிலிருந்து விலகினார். அதன்பின் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, தனியாக பஞ்சாப் மக்கள் கட்சியைத் தொடங்கியுள்ளார்.

2022ம் ஆண்டு நடக்கும் பஞ்சாப் தேர்தலில் பாஜக, சிரோன்மண் அகாலிதளம் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்தும் அமரிந்தர் சிங் பேச உள்ளார். அதேநேரம் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கும் வகையில் மக்களின் கோபத்தை கொம்பு சீவிவிடும் பணியிலும் அமரிந்தர் சிங் இறங்கியுள்ளார்.

பஞ்சாப் மாநிலதத் தேர்தல் பொறுப்பாளராகவும், வேட்பாளர்களை தேர்வும் குழுத் தலைவராகவும் பொதுச்செயலாளர் அஜெய் மாகெனை காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது. சீக்கிய கலவரத்தில் முக்கியக் குற்றவாளி லலித் மாகெனின் மருமகன் அஜெய் மாகென் என்று மக்களின் கோபத்துக்கு அமரிந்தர் சிங் கொம்புசீவியுள்ளார்.

இது குறித்து அமரிந்தர் சிங் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது

“ பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அஜெய் மாகென் தோல்விஅடைந்த அரசியல்வாதி. இவர் தலைமையில் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை இரு முறை சந்தித்தும் அந்தக் கட்சி தோல்வி அடைந்திருக்கிறது.

அஜெய் மாகென்

கடந்த 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக டெல்லியில் நடந்த கலவரத்தை சீக்கியர்கள் ஒவ்வொருவரும் மறக்கமாட்டார்கள். சீக்கியர்களை கொலையில் சூத்திரதாரிகளில் ஒருவரான லலித் மாகெனின் மருமகன்தான் பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அஜெய் மாகென். இதுபோன்ற பணிக்கு காங்கிரஸ் கட்சி இதைவிட மோசான நபரை நியமிக்க முடியாது.

சீக்கிய கலவரத்தில் தொடர்புடைய மற்றொருவரான சாஜன் குமார் விரைவில் கைது ெசய்யப்பட உள்ளார். ஆனால், அஜெய் மாகெனுக்கு பஞ்சாப் பொறுப்பாளர் என்ற பதவியை காங்கரிஸ் வழங்கியுள்ளது. இவரை காங்கிரஸ் கட்சி நியமித்தது பஞ்சாப் மக்களின் காயத்தில் உப்பைத் தடவும் செயல்.

சீக்கிய கலவரத்தில் ஏராளமான சீக்கியர்கள் உயிரோடு தீ வைத்து கொளுத்தப்பட்டது, கொல்லப்பட்டதில் தொடர்புடைய லலித் மாகெனின் மருமகன் அஜெய் மகானை பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிப்பதை காங்கிரஸ் கட்சி தவிர்க்க வேண்டும்.

அம்பிகா சோனி, சுனில் ஜாகரை தனக்கு கீழ் வைத்து பணியாற்றும் அளவுக்கு போதுமான தகுதியான நபர் அஜெய் மாகென் கிடையாது. டெல்லியில் இவர் தலைமையில் இரு தேர்தலைச் சந்தித்து காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.

இப்போது பஞ்சாப்பில் அஜெய் மாகெனிடம் தேர்தல் பொறுப்பை காங்கிரஸ் கட்சி வழங்கியுள்ளதிலிருந்து மாநிலத்தில் காங்கிரஸ் எதிர்காலம் என்னவாகும் என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள்.

கடந்த 2014, 2019ம் ஆண்டுகளில் டெல்லியில் நடந்த இரு சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஒரு இடத்தைக்கூட பெற முடியவில்லை. அதே சாதனையை பஞ்சாப்பிலும் நிகழ்த்தவே அஜெய் மாகென் அனுப்பப்பட்டுள்ளார். தோ்தலுக்கு முன்பே தோல்வி அடைந்த அரசியல்தலைவரை தேர்தல் பொறுப்பாளராக நியமித்து காங்கிரஸ் கட்சி தோல்வியை தெளிவாக ஒப்புக்கொண்டுள்ளது.

இவ்வாறு அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x