Published : 08 Dec 2021 07:50 AM
Last Updated : 08 Dec 2021 07:50 AM
கடந்த 3 ஆண்டுகளில் நாளேடுகள், தொலைக்காட்சி விளம்பரங்களுக்காக மத்திய அரசு ரூ.1,700 கோடி செலவிட்டுள்ளதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு விளம்பரத்துக்காக கடந்த 3 ஆண்டுகளில் செலவிட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மக்களவையில்நேற்று பதில் அளித்தார். அவர் கூறியதாவது:
கடந்த 2018-19 முதல் 2020-21ம் ஆண்டுவரை மத்திய அரசு, நாளேடுகளில் விளம்பரம் செய்யவும், மின்னணு ஊடகங்களில் விளம்பரம் செய்யவும் ரூ,1,698.98 கோடி செலவு செய்துள்ளது.
மத்திய அரசின் கொள்கைகள், திட்டங்கள் குறித்து பயனாளிகள் பயன் பெற வேண்டும், விழிப்புணர்வு அடைய வேண்டும் என்பதற்காகவே விளம்பரங்களுக்கு அதிகமான முக்கியத்துவத்தை மத்திய அரசு அளித்தது. குறிப்பாக தகவல் தொடர்பு கிடைக்காதஇடங்களில் வசிக்கும் மக்களுக்கு சென்று சேரும் வகையில் நாளேடுகள், மின்னணு ஊடகங்கள், வெளிப்புற ஊடக நடவடிக்கைகள் மூலம் விளம்பரங்கள் செய்யப்பட்டன.
நாளேடுகளில் விளம்பரம் செய்ய மத்திய அரசு ரூ.826.50 கோடி செலவிட்டது. இதில் 2020-21ம் ஆண்டில் மட்டும் நாளேடுகளில் விளம்பரம் செய்ய ரூ.118.59 கோடி செலவிட்டுள்ளது மத்திய அரசு. 2019-20ம் ஆண்டில் 5,265நாளேடுகளில் விளம்பரம் செய்ய ரூ.200 கோடியும், 2018-19ம் ஆண்டில் 6 ஆயிரத்து 119 நாளேடுகளில் விளம்பரம் செய்ய ரூ.507.09 கோடியும் செலவிடப்பட்டது.
மின்னணு ஊடகங்களில் விளம்பரம் செய்வதர்காக ரூ.193.52 கோடியை கடந்த 3 ஆண்டுகளில் மத்திய அரசு செலவிட்டுள்ளது
இவ்வாறு அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT