Published : 06 Dec 2021 09:47 AM
Last Updated : 06 Dec 2021 09:47 AM
கோவிஷீல்ட் தடுப்பூசியில் இரு டோஸ்களுக்கு இடையே 84 நாட்கள் இடைவெளி இருப்பது என்பது தனிநபர்கள் தங்களை சிறந்தமுறையில் கரோனாவுக்கு எதிராக பாதுகாத்துக்கொள்ளும் உரிமைக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த கிட்டெஸ் கார்மென்ட்ஸ் நிறுவனம் வழக்கறிஞர் ஹரிஸ் பீரன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது
கிட்டெக்ஸ் கார்மென்ட்ஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
ஐசிஎம்ஆர் விடுத்த அறிவுறுத்தலில் கோவிஷீல்ட் தடுப்பூசியை 6 வாரங்கள் முதல் 8 வாரங்களுக்கு இடையே எடுத்துக்கொண்டால் சிறப்பானதாக இருக்கும் என்று தெரிவித்தது. ஆனால், மத்திய அரசோ உள்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு 84 நாட்கள் இடைவெளியில் இரு தடுப்பூசிகளை செலுத்தவும், வெளிநாட்டவர்கள் , விளையாட்டு வீரர்களுக்கு 84 நாட்கள் இடைவெளியை தளர்த்துகிறது. வேறுபாட்டுடன் தடுப்பூசிக் கொள்கைகயை பின்பற்றுபது போல் இருக்கிறது.
அப்படியென்றால் எங்களிடம் பணியாற்றும் தொழிலாளர்கள் 2-வது டோஸ் தடுப்பூசியை செலுத்த 84 நாட்கள் காத்திருக்க வேண்டுமா.
முதல்டோஸ் தடுப்பூசியைச் செலுத்த எங்களின் 6,706 ஊழியர்களுக்காக ரூ.50 லட்சம் செலவிட்டோம். 12 ஆயிரம் கோவிஷீல்ட் டோஸ் தடுப்பூசி வாங்கி ஊழியர்களுக்கு ஜூன்மாதம் செலுத்தினோம். ஆனால், 2-வது டோஸ் தடுப்பூசிக்கு 84 நாட்கள் இடைவெளி தேவை என்று கூறுகிறார்கள். ஆனால் ஐசிஎம்ஆர் தடுப்பூசியை 6 வாரங்கள் முதல் 8 வாரங்களுக்கு இடையே எடுத்துக்கொண்டால் சிறப்பு எனத் தெரிவித்துள்ளது.
4 வாரங்களுக்கு மேல் கடந்துவிட்டால் விருப்பமுள்ளவர்கள் 2-வது டோஸ் எடுக்கலாம் என்று கடந்த செப்டம்பர் மாதம் கேரள உயர் நீதிமன்றத்தின் ஒருநீதிபதி அமர்வு உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை கேரள உயர் நீதிமன்ற டிவிஷன் அமர்வு ரத்து செய்துவிட்டது.
ஒருநீதிபதி பிறப்பித்த உத்தரவில், “ வெளிநாடு செல்ல விரும்புவர்கள் தங்களை கரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க விரும்புவர்கள், தங்களை முன்கூட்டியே பாதுகாப்பு அளிக்க ஏன் 2-வது டோஸ் 4வாரங்களுக்குப்பின் செலுத்தக்கூடாது. இதேபோன்ற உரிமையை சலுகையை மற்றவர்களுக்கும் ஏன் வழங்கக்கூடாது” என உத்தரவிட்டார். ஆனால், இந்த உத்தரவை கூடுதல் அமர்வு நிறுத்தி வைத்தது.
கூடுதல் அமர்வு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ளோம். “ஒருநபர் தனது வாழ்க்கையையும், குடும்பத்தார், சக ஊழியர்கள் ஆகியோரை சிறந்த முறையில் பாதுகாக்கும் உரிமையை மறுக்கும் விதத்தில் 84 நாட்கள் இடைவெளி இருக்கிறது. இது அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21 வழங்கிய உரிமைக்கு எதிரானதாகும்.
மத்திய அரசு முதலில் இரு டோஸ்களுக்கான இடையேவெளியே 4 வாரங்கள் முதல் 6 வாரங்களாகவும், பின்னர் 45 நாட்களாகவும், தற்போது 84 நாட்களாகவும் வைத்துள்ளது. தடுப்பூசியின் பற்றாக்குறைக் காரணமாக இடைவெளியே நீட்டித்துள்ளது மத்திய அரசு.
அரசியலமைப்புச்சட்டம் பிரிவு 14 , பிரிவு 21 வழங்கியபடி, ஊழியர்கள் தங்கள் உடல்நலன், உயிரைக் காத்துக்கொள்வது உரிமையாகும். சர்வதேச பயணிகள், மற்றும் உள்நாட்டு ஊழியர்களுக்கு இடையே தடுப்பூசி, இடைவெளியில் தளர்வுகள் வழங்குவது என்பது பாகுபாடு காட்டுவதில் முடியும்” இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT