Last Updated : 06 Dec, 2021 08:11 AM

1  

Published : 06 Dec 2021 08:11 AM
Last Updated : 06 Dec 2021 08:11 AM

பூஸ்ட்டர் டோஸ், குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்தப்படுமா?: இன்று முக்கிய முடிவு

புதுடெல்லி


மக்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிசெலுத்துவது குறித்தும், குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்தும் தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அவசரமாகக் கூடி இன்று ஆலோசனை நடத்துகிறது. இந்தக் கூட்டத்தில் இரு அம்சங்களுக்கும் முடிவு கிடைக்கும் என்று தெரிகிறது.

நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை ஓய்ந்துவிட்ட நிலையில், புதிதாக ஒமைக்ரான் பாதிப்பு தொடங்கியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கரோனா வைரஸின் உருமாறிய ஒமைக்ரான் வைரஸாஸ் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. இதுவரை 38 நாடுகளுக்கு ஒமைக்ரான் வைரஸ் பரவிவிட்டது.

இந்தியாவிலும் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. இதனால், 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தலாம் என்ற மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் தென் ஆப்பிரிக்காவில் குழந்தைகள் அதிகமான அளவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆதலால், இந்தியாவிலும் குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்துவதை தொடங்கலாமா என்ற கருத்து நிலவுகிறது

இந்த இரு அம்சங்கள் குறித்து ஆலோசிக்க தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு இன்று கூடுகிறது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில் “ கரோனாவுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு திங்கள்கிழமை கூடுகிறது. இந்த குழுவினர் பூஸ்டர் தடுப்பூசி, கூடுதல் தடுப்பூசி செலுத்துவது குறித்தும், குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்தும் முடிவு எடுப்பார்கள்.

இதில் கூடுதல் தடுப்பூசிக்கும், பூஸ்டர் தடுப்பூசிக்கும் வேறுபாடு இருக்கிறது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி என்பது, இருடோஸ் தடுப்பூசி செலுத்தியபின் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப்பின் செலுத்திக்கொள்வது.

ஆனால், கூடுதல்டோஸ்(அடிஷனல் டோஸ்) என்பது, ஒருவர் உடலில் இயற்கையாகவே நோய்எதிர்ப்புச் சக்தி தொடர்பான பிரச்சினை இருப்போருக்கு வழங்கப்படுவது கூடுதல் டோஸ் தடுப்பூசியாகும்.போதுமான அளவு நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்க முடியாத நிலையில், நோய் எதிர்ப்புச்சக்தியின் அளவை அதிகரிக்க இந்த டோஸ் வழங்கப்படுகிறது. ஒமைக்ரானால் இந்தியாவில் 21 பேர் பாதிக்கப்பட்டதால் இந்த திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது” எனத் தெரிவித்தார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சமீபத்தில் மக்களவையில் அளித்த பதிலில் “ தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, தடுப்பூசி நிர்வாக தேசிய வல்லுநர்கள் குழு இணைந்து பூஸ்டர் டோஸ் குறித்து அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் அடிப்படையில் முடிவு எடுப்பார்கள்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x