Published : 05 Dec 2021 06:24 PM
Last Updated : 05 Dec 2021 06:24 PM
சிறிய தேனீக்களைப் பயன்படுத்தி, யானைகள் – மனித மோதலைத் தடுக்க அஸ்ஸாமில் ரீ-ஹேப் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சிறிய அளவிலான தேனீக்களைப் பயன்படுத்தி, யானைகள்-மனிதர்கள் இடையிலான மோதலைத் தடுக்கும் புதுமைத் திட்டமான RE-HAB (Reducing Elephant-Human Attacks using Bees) கர்நாடகாவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தற்போது அஸ்ஸாமிலும் இத்திட்டத்தை கதர் கிராமத் தொழில்கள் ஆணையம் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.
யானைகள்-மனிதர்கள் மோதலால் கடுமையாக பாதிக்கப்பட்ட, அஸ்ஸாமின் கோல்பாரா மாவட்டத்தில் உள்ள மோர்னோய் கிராமத்தில், கதர் கிராமத் தொழில் வாரியத் தலைவர் வினய் குமார் சக்ஸேனா, இத்திட்டத்தை தொடங்கிவைத்தார்.
உள்ளூர் வனத்துறையினரின் உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின்கீழ், யானைகள் செல்லும் வழித்தடத்தில், அவை மனிதர்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில், தேனீ வளர்ப்புப் பெட்டிகளை வைத்து, தேனீ -வேலிகள் அமைக்கப்பட்டு, இந்தப் பெட்டிகளை இழுத்தால் பெட்டிகளில் உள்ள தேனீக்கள் யானைகளை சுற்றிவளைத்து விரட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது, செலவு குறைவானது என்பதுடன், விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல், யானைகள்-மனிதர்கள் இடையிலான மோதலைத் தடுக்கிறது.
அடர்ந்த வனப்பகுதியால் சூழப்பட்ட அஸ்ஸாமின் பெரும்பகுதியில் யானைகள் உள்ள நிலையில், யானைகளின் தாக்குதலால் 2014 முதல் 2019 வரை 332 மனிதர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT