Published : 05 Dec 2021 12:26 PM
Last Updated : 05 Dec 2021 12:26 PM
நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்களுக்கு கோவிட்-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளதாக கூறிய மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்தியாவின் ஒட்டுமொத்த தடுப்பூசி கவரேஜ் 127.61 கோடியைத் தாண்டியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் கோவிட்-19 தடுப்பூசி இயக்கம் ஜனவரி 16, 2021 அன்று தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில், சுகாதாரப் பணியாளர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது.
பிப்ரவரி 2 முதல், மாநில மற்றும் மத்திய காவல்துறை பணியாளர்கள், ஆயுதப்படை பணியாளர்கள், ஊர்க்காவல்படையினர், குடிமைத் தற்காப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை தன்னார்வலர்கள், நகராட்சி ஊழியர்கள், சிறை ஊழியர்கள், கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள பிஆர்ஐ பணியாளர்கள் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள், ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் தேர்தல் பணியாளர்கள் ஆகியோர் உள்ளிட்டவர்கள்
முன்னணி பணியாளர்கள் தடுப்பூசிக்கு தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்டனர்.
தடுப்பூசி இயக்கம் மார்ச் 1 முதல் விரிவுபடுத்தப்பட்டு, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுடன் தொடர்புடைய குறிப்பிட்ட 20 இணை நோய்களை உள்ளவர்களையும் உள்ளடக்கியது.
ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இது மேலும் விரிவுபடுத்தப்பட்டது. மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களும் கோவிட்-19 தடுப்பூசிக்கு தகுதி பெற்றனர்.
இந்தியாவின் தடுப்பூசிகளில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக் வி, மாடர்னா, ஜான்சன் மற்றும் ஜான்சன் மற்றும் சைடஸ் காடிலா ஆகியவை அடங்கும்.
ட்விட்டரில் அமைச்சர் வாழ்த்து
இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை கூடியுள்ளதற்கு கூறியுள்ள மத்திய சுகாதார அமைச்சர் வாழ்த்துதெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளதாவது:
"நாம் வெற்றி பெறுவோம். வாழ்த்துகள் இந்தியா. தகுதியான மக்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் தற்போது முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்பது பெருமைக்குரிய தருணம்.
கோவிட்-19க்கு எதிரான போரில் ஒன்றாக வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT