Published : 04 Dec 2021 09:48 AM
Last Updated : 04 Dec 2021 09:48 AM
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று அதிகரித்து வரும்நிலையில் இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் தடுப்பூசிகளின் செயல்திறனை மதிப்பீடு செய்ய வேண்டும், கருத்தில் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
சுகாதாரத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு நேற்று தனது அறிக்கையை மத்திய அரசிடம் அளித்துள்ளது. அதில்முக்கிய சாரசம்சமாக “ புதிய வகை, உருமாற்ற கரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசிகளின் செயல்திறனை ஆய்வு செய்ய வேண்டும், பூஸ்டர் டோஸ்தடுப்பூசி செலுத்துவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும், தடுப்பூசிகள் குறித்து அதிகமான ஆய்வு தேவை” எனத் தெரிவித்துள்ளது.
வைரஸ் அதிகமாக உருமாற்றம் பெரும்போது, அதிகமான பாதிப்புகளையும், வேகமாகப் பரவலையும் அடையும். ஆதலால் கரோனா தடுப்பு வழிமுறைகள், நடவடிக்கைகளில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எந்தவிதமான சமசரமும் செய்யக்கூடாது எனத் தெரிவித்துள்ளது.
கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களை சரியான நேரத்தில் கண்டுபிடிப்பதும், அவர்களைத் தனிமைப்படுத்தி வைப்பதும், கரோனா தொற்றைக் குறைக்க உதவும் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கரோனாவைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதாக இல்லை. சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த கவனம் செலுத்த வேண்டும், குறிப்பாக மருத்துவமனைகளில் படுக்கைகளை மேம்படுத்துவது, போதுமான அளவு ஆக்சிஜன் சிலிண்டர்களை வைத்திருப்பது, அத்தியாவசிய மருந்துகளை வைத்திருப்பது அவசியமாகும்.
மூன்றாவது அலைவருவதற்கான சூழல் உருவாகி வரும் நிலையில், அதற்குள் காலஅவகாசத்தைப் பயன்படுத்தி, சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.
அதிகமான பரவல் தன்ைம கொண்டதாகக் கருதப்படும் ஒமைக்ரான் வைரஸுக்கு எதிராக தடுப்பூசிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்து மதிப்பீடு செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம். புதியவகை வைரஸ் தடுப்பூசி மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்புச்சக்தியை மீறி வருவதால் தடுப்பூசிகளின் செயல்திறனை மதிப்பீடு செய்ய வேண்டும்.
புதியவகை ஒமைக்ரான் வைரஸ் 30க்கும் மேற்பட்ட உருமாற்றங்களுடன் வந்துள்ளது. ஆதலால், அதைக் கண்டறிய போதுமான அளவுபரிசோதனைகள், ஆய்வுகூடங்கள், கண்டறிந்தவர்களைக் கண்காணித்தல் போன்றவற்றை குறிப்பாக விமானநிலையங்களில் வலுப்படுத்த வேண்டும். வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை பரிசோதனை செய்து, அவர்களை ஆய்வுக்கு உட்படுத்தி நெகட்டிவ் என உறுதி செய்து அனுப்ப வேண்டும்.
தற்போது புழக்கத்தில் இருக்கும் தடு்பபூசிகளின் செயல்திறன் குறித்து கவலையாக இருக்கிறது. ஒமைக்ரான் வைரஸ், தடுப்பூசிகள் மூலம் கிடைக்கும் நோய்எதிர்ப்புச் சக்தியை அழித்துவிடக்கூடும். ஆதலால் தடுப்பூசிகள் குறித்து அதிகமான ஆராய்ச்சியும், ஆய்வும் செய்வது அவசியம். குறிப்பிட்ட பிரிவினருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது குறித்தும் மத்தியஅ ரசு பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment