Published : 03 Dec 2021 09:30 AM
Last Updated : 03 Dec 2021 09:30 AM

சாலையில் கடக்கும்போதும், நடக்கும்போதும் பாதசாரிகள் விதிகளைக் கடைபிடிக்காததே விபத்துக்கு காரணம்: மத்திய அரசு விளக்கம்

மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி | கோப்புப்படம்

புதுடெல்லி


சாலையில் நடக்கும்போதும், கடக்கும்போதும் பாதசாரிகள் விதிகளைக் கடைபிடிக்காததே விபத்துகளுக்கு காரணம் என்று மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

பாஜக எம்.பி. பிரிஜ் லால் எழுப்பிய கேள்விக்கு மாநிலங்களவையில் மத்திய நெடுஞ் சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துபூர்வ பதில் அளித்தார். அவர் கூறியதாவது:

பொதுவாக சாலையில் நடக்கும் விபத்துக்கள் என்பது பாதசாரிகள் நடக்கும்போதும், போக்குவரத்து நெரிசலின்போது சாலைகளைக் கடக்கும்போதும் விதிகளைக் கடைபிடிக்காமல் இருக்கும்போது ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வாகனங்கள் உரிய வேகத்தில் செல்லாமல் அதிக வேகத்தில் செல்வதாலும் ஏற்படுகிறது.

பாதசாரிகள் அதிகமாக விபத்துகளில் இறப்பது குறித்து இதுவரை எந்தவிதமானஆய்வும், அது தொடர்பான பகுப்பாய்வும் செய்யவில்லை. சாலைவிபத்துகளைத் தடுத்து, உயிர்களைப் பாதுகாக்கும் வகையில் கடந்த 2019ம் ஆண்டு திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது.

சாலைப் பாதுகாப்பு, விதிகளை மீறினால் அபராதம், சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் அபராதம், வாகனத்தணிக்கை, ஓட்டுநர் உரிமம், பரிசோதனை, காப்பீடு, மூன்றாம்தரப்பு காப்பீடு ஆகியவற்றை உள்ளடக்கிய சட்டமாக கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், சாலையைக் கடக்கும்போது பாதசாரிகள் உயிரிழப்பது குறித்து எந்த ஆய்வும் நடத்தவில்லை” எனத் தெரிவித்தார்

மாநிலங்களவையில் மத்திய அரசு அளித்த புள்ளிவிவரங்கள்படி, கடந்த 2020்ம் ஆண்டில் 23,483 பேர் சாலையைக் கடக்கும்போதும், நடக்கும்போதும் பாதசாரிகள் வாகனம்மோதி உயிரிழந்தனர். கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2019ம் ஆண்டைவிட சற்று உயிரிழப்பு குறைந்துள்ளது. 2019ம் ஆண்டில் 25,858 பாதசாரிகள் உயிரழந்திருந்தனர். 2018ம் ஆண்டில் 22,656 பேர் மட்டுமே உயிரிழந்திருந்தனர்.
2020ம் ஆண்டில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 714 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர், 2019ம் ஆண்டில் இது ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 113 ஆக அதிகரி்த்திருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x