Published : 03 Dec 2021 03:06 AM
Last Updated : 03 Dec 2021 03:06 AM
உத்தர பிரதேசத்தில் உள்ள 150 ஆண்டு பழமையான அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், நாட்டின் பழமையான மத்தியப் பல்கலைக்கழகமாகவும் உள்ளது. இதன் மொழியியல் துறையின் பிரிவான விளம்பரம், சந்தை மற்றும் ஊடகங்களுக்கான மொழியியலில் (எல்ஏஎம்எம்) முனைவருக்கான ஆய்வை முடித்தவர் தானிஷ் ரஹீம். கடந்த ஆகஸ்டில் அவருக்கு அளிக்கப்பட்ட சான்றித ழில் எழுத்துப் பிழை இருப்பதாக கூறி திரும்பப் பெறப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அலிகர்வாசியான தானிஷ் ரஹீம் கூறும்போது, ‘‘கடந்த ஆகஸ்டில் பல்கலைக்கழகத்தின் 150-வது ஆண்டு விழாவின் காணொலி உரையில் பிரதமர் மோடி பேசினார். இதற்காக அவரை நான் பாராட்டி சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்தேன். இதனால், என்மீது பழி வாங்கும் பொருட்டுஎனது முனைவர் பட்டத்திற்கானச் சான்றிதழ் திரும்பப் பெறப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்திருந்தார். இதன் மீதானப் புகார் கடிதத்தை உ.பி. முதல்வர் ஆதித்யநாத் மற்றும்பிரதமர் மோடிக்கும் அனுப்பினார் ரஹீம். இத்தகவல் வெளியாகி சர்ச்சை கிளம்பியது. இதில் தலையிட்ட அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிர்வாகம் மறுப்பு தெரிவித்து விளக்கம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து அலிகர் பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,‘‘மாணவர் ரஹீம் கடந்த 2016-17 கல்வியாண்டில் முனைவர் பட்டத்திற்கான மொழியியல் துறை யின் எல்ஏஎம்எம் பிரிவில் சேர்ந்தார். தனது ஆய்வை சமர்ப்பித்தவருக்கு கடந்த ஆண்டு தவறுதலாக மொழியியல் துறையின் பேரில் சான்றிதழ் அளிக்கப்பட்டு விட்டது. இதைத்தான் திரும்பப் பெற்று எல்ஏஎம்எம் பிரிவில் அவருக்கு எல்ஏஎம்எம் பிரிவால் புதிய சான்றிதழ் அளிக்கப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மொழியியல் துறை தலைவர் எம்.ஜே.வார்ஸி, தானிஷ் ரஹீம் மீது மானநஷ்ட இழப்பீடு வழக்கை தொடுக்க திட்டமிட்டுள்ளார். ரஹீமை இதுவரை சந்திக்காததுடன் அவரிடம் தொலைபேசியிலும் தான் பேசாதபோது மிரட்டியதாக ரஹீம் கூறுவது தவறு எனவும் தெரிவித்துள்ளார்.
இப்பிரச்சினை மொழியியல் துறை மற்றும் அதன் பிரிவான எல்ஏஎம்எம் பிரிவின் பேராசிரி யர்களுக்கு இடையிலான மோதல்களின் வெளிப்பாடு என்கின்றனர். இதில், மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழுவால் மொழியியல் துறைக்கு மட்டும் அங்கீகாரம் இருப்பதாக வும், இன்னும் அதன் பிரிவிற்கு அளிக்கப்படவில்லை என்றும் கூறப் படுகிறது. மற்றொரு மாணவியின் முனைவர் சான்றிதழும் திரும்பப் பெறப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT