Published : 03 Dec 2021 03:06 AM
Last Updated : 03 Dec 2021 03:06 AM

திருப்பதி மலைப்பாதை சேதம்: ஐஐடி ஆய்வு குழு எச்சரிக்கை

திருமலை

திருப்பதியிலிருந்து திரு மலைக்கு செல்லும் 2-வது மலைப் பாதையில் கடந்த புதன்கிழமை குன்றுகள் சரிந்து போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது. அதனால்2-வது மலைப்பாதை மூடப்பட்டுள்ளது. தற்போது முதலாவது மலைப் பாதையிலேயே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

கன மழைக்கு திருமலையின் 2-வது மலைப்பாதையில் 14 இடங் களில் சேதம் ஏற்பட்டுள்ளதாக நேற்று வந்திருந்த டெல்லி ஐஐடி குழுவினர் கண்டறிந்துள்ளனர். இதில், 4 இடங்களில் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், முற்றிலும் பாதை சரி செய்யப்படும் வரை வாகன போக்குவரத்தை நிறுத்த வேண்டு மெனவும், மீறினால் ஆபத்து நிச்சயம் என்றும் டெல்லி ஐஐடி குழு கருத்து தெரிவித்துள்ளது.

இதனால், தேவஸ்தானம் 3-வது மலைப்பாதையை அமைக்கும் திட்டத்தையும் ஆலோசித்து வருகிறது. ஏற்கெனவே திருப்பதி யிலிருந்து திருமலைக்கு ‘ரோப் கார்’ திட்டம், இழுவை ரயில் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால் பல காரணங்களால் கைவிடப்பட்டன.

தற்போது 2-வது மலைப்பாதையில் கற்கள் சரிந்து விழுந்து அதிர்ச்சியை உண்டாக்கி வருவதால், 3-வது மலைப்பாதை அமைக்க மீண்டும் ஆலோசனை நடத்தப்படும் என அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x