Published : 02 Dec 2021 06:16 PM
Last Updated : 02 Dec 2021 06:16 PM

கூட்டணிக்கு தலைமை ஏற்பது ஒன்றும் காங்கிரஸின் தனியுரிமை அல்ல: பிரசாந்த் கிஷோர்

ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு தலைமை ஏற்பது என்பது காங்கிரஸ் கட்சி அல்லது எந்த ஒரு தனிநபரின் முடியுரிமை அல்ல என தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மகாராஷ்டிரா மாநிலத்துக்கு 3 நாட்கள் பயணமாக சென்றிருந்தார். அதில் நேற்றுமுன்தினம் சிவசேனா கட்சித் தலைவரும், உத்தவ் தாக்கரே மகனுமான ஆதித்யா தாக்கரேவையும், மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தையும் மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசினார். முதல்வர் உத்தவ் தாக்கரேவை சந்தித்துப் பேசப்போவதாக மம்தா பானர்ஜி முதலில் தெரிவித்திருந்தநிலையில் உத்தவ் தாக்கரேவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சந்திப்பு ரத்தானது. நேற்று, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரை மம்தா பானர்ஜி சந்தித்தார்.

இந்த சந்திப்புக்குப் பின் பேசிய மம்தாவிடன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு யார் தலைமை ஏற்பது சரத்பவார் ஏற்பாரா என்று நிருபர்கள் கேட்டபோது, "எந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி பற்றி பேசுகிறீர்கள். ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்பது இல்லை. வலிமையான மாற்று கூட்டணியை உருவாக்க முயன்று வருகிறோம். நாம் பாஜகவுக்கு எதிராக கண்டிப்பாகப் போராட வேண்டும். சிலர் போராடாதபோது நாம் என்ன செய்யமுடியும். நாம் போராட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், வலுவான எதிர்க்கட்சி குறித்தும் எதிரணியின் தலைமை குறித்தும் பிரசாந்த் கிஷோர் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் குறிப்பாக காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரசாந்த் தனது ட்வீட்டில், "வலுவான எதிரணி அமைவதற்கு காங்கிரஸின் யோசனை மிகவும் முக்கியமானது. ஆனால் அந்த கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமையில் தான் கூட்டணி என்பது அக்கட்சியின் முடியுரிமை அல்ல. அதுவும் கடந்த 10 ஆண்டுகளில் 90% தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்திருக்கும் நிலையில், எதிர்க்கட்சிக்கு தலைமை ஜனநாயக முறைப்படி அமைய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x