Last Updated : 02 Dec, 2021 01:37 PM

 

Published : 02 Dec 2021 01:37 PM
Last Updated : 02 Dec 2021 01:37 PM

கிராமப்புற எழுத்தறிவுத் திட்டம்; 20 ஆண்டுகளாக முன்னணியில் தமிழகம்: மக்களவையில் அஷ்வின் வைஷ்ணவ் பாராட்டு

அஷ்வின் வைஷ்ணவ்- கோப்புப் படம்

புதுடெல்லி

கிராமப்புறப் பகுதிகளில் எழுத்தறிவுத் திட்டத்தில் சுமார் 20 ஆண்டுகளாக தமிழகம் முன்னணி வகிப்பதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ் பாராட்டினார். இதை அவர், மக்களவையில் திமுக எம்.பி.யான தமிழச்சி தங்கபாண்டியன் கேள்விக்கு அளித்த பதிலில் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று தென் சென்னை தொகுதி திமுக எம்.பி.யான தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பியக் கேள்வியில், ‘‘கிராமப்புறவாசிகளுக்கான பிரதம மந்திரி கிராம டிஜிட்டல் எழுத்தறி திட்டம் பயனாளர்கள் எண்ணிக்கை என்ன? இதில் ஒடுக்கப்பட்ட சமூகமான எஸ்சி, எஸ்டி பிரிவினரும் சேர்க்கப்பட்டுள்ளனரா? அதன் விவரம் என்ன?’’ எனக் கேட்டிருந்தார்.

இதற்கான பதிலில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரான அஷ்வின் வைஷ்ணவ் கூறும்போது, ‘‘சுமார் 5.36 கோடி கிராமப்புறக் குடும்பத்தினரில் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் எஸ்சி 67,88,527, எஸ்டி 29,26,211, பெண்கள் 1,85,71,710 மற்றும் மாற்றுத்திறனாகள் 5,86,291பேர் பலன் அடைந்துள்ளனர்’’ எனத் தெரிவித்தார்.

இதற்கான துணைக்கேள்வியாக திமுக எம்.பி.யான தமிழச்சி எழுப்புகையில், ‘‘அமைச்சர் சமர்பித்த அட்டவணையில் தனிப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குறைவானவர்கள் இடம் பெற்றுள்ளனர். இதற்கானக் காரணம் என்ன?’’ எனக் குறிப்பிட்டார்.

இதற்கான மத்திய அமைச்சர் வைஷ்ணவ் அளித்த பதிலில், ‘‘இத்திட்டத்தின் பயனாளர்களை மாநில அரசுகள் பரிந்துரைக்கின்றனர். இதில், அனைத்து மாநில அரசுகளின் பங்கு மிகவும் முக்கியமானது.

தமிழகத்தில் நீண்ட காலமாக ஒரு கலாச்சாரம் இருந்து வருகிறது. இம்மாநிலத்தில் டிஜிட்டல் எழுத்தறிவுகாக அதன் அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இதில், மடிக்கணிகள் விநியோகம் உள்ளிட்டப் பலவற்றில் கடந்த 15 முதல் 20 ஆண்டுகளாக வெற்றிகரமான அரசுகளின் திட்டங்களாக செயல்பட்டுள்ளன. எனவே, தமிழ்நாட்டின் டிஜிட்டல் எழுத்தறிவு பெற்றவர்கள் இந்த அட்டவணையில் ஏற்கெனவே அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

எனவே, மாநிலக் கிராமப்புறவாசிகளுக்கான மத்திய அரசின் டிஜிட்டல் எழுத்தறிவுத் திட்டத்தில் குறைந்த பயனாளிகள் உள்ளனர்.’’ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x