Published : 30 Nov 2021 08:54 AM
Last Updated : 30 Nov 2021 08:54 AM
இந்தியாவில் தயாரி்க்கப்பட்ட தடுப்பூசிகள், உயிர் காக்கும் மருந்துகள், பரிசோதனைக் கருவிகள், கையுறைகள், பிபிஇ கிட், வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழங்கதயாராக இருப்பதாக மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில்தான் கடந்த 24-ம் தேதி முதல்முறையாக ஓமைக்ரான் வகை ைவரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல், பிரி்ட்டன், நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.
இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
இந்நிலையில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், தடுப்பூசிகள், உயிர் காக்கும் மருந்துகளை அனுப்ப இந்தியா தயாராக இருக்கிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
ஆப்பரிக்க நாடுகளில் கரோனா வைரஸின் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் உருவாகியிருப்பதை அறிந்தோம். இந்த நேரத்தில் குறிப்பாக ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட ஆப்பிரி்க்க நாடுகளுக்கு தோளோடு தோள்கொடுத்துநிற்கிறோம் என தெரிவிக்கிறோம்.
ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குத் தேவையான இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள், உயிர் காக்கும் மருந்துகளை வழங்கத் தயாராக இருக்கிறோம். கோவேக்ஸ் மூலமும் இந்த உதவிகள் வழங்கப்படும், நாங்களும் தனியாக வழங்குகிறோம்.
மாலாவி, எத்யோப்பியா, ஜாம்பியா, மொசாம்பிக், கினியா, லெசோதோ ஆகிய நாடுகளுக்கு ஏற்கெனவே கோவிஷீல்ட் தடுப்பூசிகளை அனுப்பி இருக்கிறோம். போட்ஸ்வானாவுக்கும் கோவாக்சின் தடுப்பூசிகளை அனுப்பிவிட்டோம். கூடுதலாக எந்த உதவிகள் தேவைப்பட்டாலும் ஐ.நா.வின் கோவாக்ஸ் மூலமோ அல்லது நேரடியாக உதவிகளை வழங்கத் தயாராக இருக்கிறோம்.
பரிசோதனைக் கருவிகள், பிபிஇஆடைகள்,மருத்துவ உபகரணங்கள், வென்டிலேட்டர், மருந்துகள் என தேவைப்பட்டதை வழங்க தயாராக இருக்கிறோம். ஒமைக்ரோன் வைரஸின் மரபணு கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, கண்காணிப்பு, அதன் குணம் ஆகியவற்றை கண்டறியும் ஆய்விலும் இந்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் தேவையான உதவிகளை வழங்கும்.
இந்தியா இதுவரை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2.50 கோடி தடுப்பூசிகளை ஆப்பிரிக்காவில் உள்ள 41 நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளன. இதில் 16 நாடுகளக்கு 10 லட்சம் டோஸ்தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியுள்ளது. ஐ.நா.வின் கோவாக்ஸ் மூலம் 33 நாடுகளுக்கு 1.60 கோடி டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT