Published : 29 Nov 2021 05:39 PM
Last Updated : 29 Nov 2021 05:39 PM
பணவீக்கத்தை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார். குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல்நாளான இன்று திமுகவின் எம்.பி.யான எஸ்.ஆர்.பார்திபன் எழுப்பியக் கேள்விக்கான பதிலாக அது அமைந்திருந்தது.
இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் மக்களவையில் சமர்ப்பித்த பதிலில் குறிப்பிட்டிருந்ததாவது:
பொருளாதாரத்தில் பணவீக்க நிலையை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
சிபிஐ-சி அடிப்படையிலான பணவீக்க விகிதம் என்பது பொருளாதாரத்தின் தலையாய பணவீக்க விகிதம் ஆகும். ஜூலை 2021, சிபிஐ-சி அடிப்படையிலான சில்லறை பணவீக்கம், தோராயமாக இரண்டு சதவீத புள்ளிகள் சகிப்புத்தன்மை கொண்டுள்ளது.
இதன் இலக்கு 4 சதவிகித வரம்பிற்குள் ஏப்ரல் 1, 2021 முதல் மார்ச் 31, 2026 வரை அரசு நிர்ணயித்துள்ளது. பணவீக்கத்தின் ஏற்றம் பெரும்பாலும் வெளிப்புறக் காரணிகளால் வழிநடத்தப்படுகிறது.
கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எண்ணெய்களின் சர்வதேச விலை உயர்வு, உள்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மொத்த விற்பனைவிலக் குறியீடு பணவீக்கத்தின் உயர்வும் உள்ளது.
பெரும்பாலும் எரிபொருள் மற்றும் சக்தி மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் பணவீக்கத்தால் இயக்கப்படுகிறது.
கச்சா எண்ணெயின் உலகளாவிய மற்றும் சர்வதேச பொருட்களின் விலைகள் அதிகரித்தன.
இதைத் தடுக்க அரசாங்கத்தால் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய கலால் வரியை முறையே ரூ.5 மற்றும் ரூ.10 என நவம்பர் 4முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
பதிலுக்கு பல மாநில அரசுகளும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கூடுதல் வரி மதிப்பைக் குறைத்துள்ளன. இதனால், பெட்ரோல், டீசல் சில்லறை விலை குறைந்துள்ளது.
இந்த விலையைக் கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கையாக, அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் கொரியா குடியரசு ஆகிய உலக நாடுகளின் ஆலோசனையில் ஐந்து மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் இருப்புக்களில் இருந்து விடுவிக்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள்: முக்கிய அத்தியாவசியப் பொருட்களின் விலை நிலவரம் கண்காணிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் ஒரு வழக்கமான அடிப்படையில் மற்றும் அவ்வப்போது சரிசெய்தல் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
பருப்பு விலை உயர்வைக் கட்டுப்படுத்த, அரசு எடுத்துள்ள சில நடவடிக்கைகள். 2021-22க்கு 23 லட்சம் மெட்ரிக் டன் (LMT) இடையகப் கையிருப்பு வைக்க இலக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கையிருப்பு பின்னர் திறந்த சந்தை விற்பனை மூலம் விலைகளை உறுதிப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. சில பருப்பு வகைகளின் இருப்பு வரம்புகளையும் அரசாங்கம் அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கல் தடை சட்டம், 1955 கீழ் ஜூலை 2021 இல் சில விதிமுறைகளை விதித்துள்ளது.
டிசம்பர் 31, 2021 வரை துவரை மற்றும் உழுந்து ஆகிய பருப்பு வகைகள் தடையின்றி இறக்குமதி செய்ய இறக்குமதி கொள்கையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மசூர் பருப்பு மீதான வரி மற்றும் விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி முறையே பூஜ்ஜியம் மற்றும் 10 சதவிகிதம் வரை அடிப்படை இறக்குமதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
சமையல் எண்ணெய்களின் விலையை குறைக்க, சமையல் எண்ணெய்கள் மீதான வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. பதுக்கி வைப்பதைத் தவிர்ப்பதற்காக, மார்ச் 31, 2022 வரையிலான கையிருப்புக்கான வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டு உற்பத்தி மற்றும் பாம் ஆயுள் கிடைப்பதை ஊக்குவிக்க தேசிய எடிபிள் ஆயில்ஸ் மிஷன்- ரூ.11,040 கோடி நிதி செலவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT