Published : 26 Nov 2021 03:13 PM
Last Updated : 26 Nov 2021 03:13 PM
இந்தியாவின் பால் மனிதர் என்று போற்றப்படும் டாக்டர் வர்கீஸ் குரியனின் நூற்றாண்டை குறிக்கும் வகையில் தேசிய பால் தினம் இன்று மத்திய அரசின் சார்பில் கொண்டாடப்பட்டது.
1970 வரை இந்தியா முழுவதும், பாலுக்கு அதிகமான தட்டுப்பாடு நிலவியது. பால் ரேஷனில் வழங்கப்பட்டது. தாய்மார்கள் குழந்தைகளின் பசி தீர்க்கத் தடுமாறினார்கள்.
இன்று, பால், தயிர், வெண்ணெய், சீஸ், குழந்தை உணவுகள் தாராளமாகக் கிடைக்கின்றன. இந்தியாவில் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டவர் வர்கீஸ் குரியன்.
அவரது நினைவை போற்று விதமாக அவரது பிறந்தநாளான நவம்பர் 26-ம் தேதியான இன்று தேசிய பால் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு குரியனின் நூற்றாண்டு பிறந்த தினம் என்பதால் மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் தேசிய பால் வாரியம் உள்ளிட்டவை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை சார்பில் குஜராத்தின் ஆனந்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாட்டு வாரிய வளாகத்தில் இன்று நிகழ்ச்சி நடைபெற்றது.
மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ருபாலா, இணை அமைச்சர்கள் எல். முருகன் மற்றும் சஞ்சீவ் குமார் பல்யான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் மற்றும் டாக்டர் குரியனால் உருவாக்கப்பட்ட இதர நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, நாட்டு மாடு, எருமை இனங்களை வளர்க்கும் சிறந்த பால் பண்ணையாளர், சிறந்த செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் சிறந்த பால் கூட்டுறவு சங்கம், பால் உற்பத்தியாளர் உள்ளிட்ட விருதுகளை வென்றவர்களுக்கு தேசிய கோபால் ரத்னா விருதுகளை வழங்கினார்.
குஜராத்தின் தாம்ரோட் மற்றும் கர்நாடகாவின் ஹெசர்கட்டாவில் ஐவிஎஃப் ஆய்வகத்தை திறந்து வைத்ததுடன், ஸ்டார்ட்-அப் கிராண்ட் சேலஞ்ச் 2.0-ஐயும் அவர் தொடங்கி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT