Last Updated : 23 Nov, 2021 09:42 AM

 

Published : 23 Nov 2021 09:42 AM
Last Updated : 23 Nov 2021 09:42 AM

இந்தியாவில் 7,579 பேருக்கு கரோனா: 543 நாட்களில் இல்லாத அளவுக்கு அன்றாட பாதிப்பு குறைவு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,579 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இது கடந்த 543 நாட்களில் இல்லாத அளவுக்கு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 236 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 7,579. இதில் கேரளாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,698.

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,45,26,480.

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 12,202.

இதுவரை குணமடைந்தோர்: 3,39,46,749.

நோயிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.32% என்றளவில் உள்ளது. இது கடந்த 2020 மார்ச் மாதத்திற்குப் பின் மிக அதிகமானது.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 236 ​​​​​​. கேரளாவில் மட்டும் 75 பேர் இறந்தனர்.

கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,66,147..

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 1,13,584 . இது கடந்த 536 நாட்களில் இல்லாத அளவுக்குக் குறைவு.

வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் 0.93% ஆக உள்ளது. இது கடந்த 59 நாட்களாக 2%க்கும் கீழ் உள்ளது.

தினசரி பாசிடிவிட்டி விகிதம் 1.08% ஆக உள்ளது. இது கடந்த 49 நாட்களாக 2%க்கும் கீழ் உள்ளது.

பாசிடிவிட்டி ரேட் என்பது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று இருக்கிறது என்பதை உறுதி செய்யும் கணக்கீடு.

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 1,17,63,73,499 (117.63) கோடி.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x