Last Updated : 22 Nov, 2021 12:12 PM

5  

Published : 22 Nov 2021 12:12 PM
Last Updated : 22 Nov 2021 12:12 PM

6 முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து பிரதமர் மோடிக்கு விவசாயிகள் அமைப்பு கடிதம்: மகா பஞ்சாயத்தில் எம்எஸ்பி குறித்து முடிவு

பிரதமர் மோடி | கோப்புப்படம்

புதுடெல்லி

மத்திய அமைச்சர் ஆஷிஸ் மிஸ்ராவைக் கைது செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு விவசாயிகளின் சம்யுக்தா கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) கடிதம் எழுதியுள்ளது.

லக்னோவில் இன்று நடக்கும் மகா பஞ்சாயத்தில் விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. அதேநேரம், வரும் 29-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்துவதில் எந்த மாற்றமும் இல்லை என விவசாய அமைப்புகள் தெரிவித்தன.

பிரதமர் மோடிக்கு விவசாயிகளின் சம்யுக்தா கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

''3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்தமைக்கு விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவிக்கிறோம். ஆனால், 11 சுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பின்பும், நீங்கள் இருதரப்பு தீர்வுக்குப் பதிலாக ஒரு தரப்பு அறிவிப்பையே தேர்ந்தெடுத்தீர்கள். நாங்கள் உங்கள் முன் 6 முக்கியக் கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.

  • அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் உற்பத்திச் செலவு அடிப்படையில் முழுமையான குறைந்தபட்ச ஆதரவு விலை தர வேண்டும்.
  • லக்கிம்பூர் கெரி கலவரத்தில் தொடர்புடைய மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவைக் கைது செய்ய வேண்டும்.
  • விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.
  • போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்காக நினைவிடம் அமைக்க வேண்டும்.
  • காற்றுதர மேலாண்மை ஆணையத்தின், தேசிய தலைநகர் மண்டல் மற்றும் சுற்றுப்பகுதிச் சட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு எதிரான குற்ற நடவடிக்கை எடுக்கும் பிரிவை நீக்க வேண்டும்.
  • மின்சாரத் திருத்தச் சட்டம் 2021-ஐத் திரும்பப் பெற வேண்டும்.

விவசாயிகள் இப்போது வீட்டுக்குச் செல்லலாம் என்று பிரதமராகிய நீங்கள் கேட்டுக்கொண்டீர்கள். நாங்கள் உங்களிடம் இருந்து உறுதி கேட்கிறோம், நாங்கள் தெருவில் அமரமாட்டோம். மற்ற விஷயங்களுக்கு விரைவாகத் தீர்வு கண்டபின் நாங்களும் வீட்டுக்குச் செல்லவும், குடும்பத்தினரைக் காணவும், விவசாயம் செய்யவும் எங்களுக்கும்கூட ஆசையாக இருக்கிறது.

உங்களுக்கும் விருப்பம் இருந்தால், மீண்டும் பேச்சுவார்த்தையை 6 கோரிக்கைகளுக்காக எஸ்கேம் அமைப்புடன் தொடங்கிடுங்கள். அதுவரை எஸ்கேஎம் அமைப்பு போராட்டத்தைத் தொடரும்''.

இவ்வாறு கடித்ததில் தெரிவிக்கப்பட்டுள்ளது

வேளாண் அமைப்பின் மூத்த தலைவர் பல்பிர் சிங் ராஜேவால் கூறுகையில், “வரும் 27-ம் தேதி எஸ்கேஎம் அமைப்பு மீண்டும் கூடுகிறது. அப்போது, எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும். வேளாண் சட்டங்கள் வாபஸ் குறித்தும் பேசுவோம். 22-ம் தேதி நடக்கும் கிசான் பஞ்சாயத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x