Published : 27 Mar 2016 02:13 PM
Last Updated : 27 Mar 2016 02:13 PM
குஜராத் போர்பந்தர் நாடாளுமன்ற தொகுதி பாஜக எம்.பி. விட்டல் ரதாதியா இசை நிகழ்ச்சி ஒன்றில் முதியவர் ஒருவரை காலால் எட்டி உதைத்த காட்சி வீடியோவில் பதிவாகி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
தனது தொகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் முதியவர் ஒருவரை பாஜக எம்.பி. ரதாதியா மீண்டும் மீண்டும் காலால் எட்டி உதைத்த காட்சி வீடியோ காமிராவில் பதிவாகி, சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இது வைரலானதை அடுத்து தொலைக்காட்சி சேனல்களும் இந்தக் காட்சியை தங்களது செய்தி ஒளிபரப்பின் போது மீண்டும் மீண்டும் போட்டுக் காண்பிக்கப்பட்டது.
ஆனால், இந்த சம்பவம் என்று நடந்தது என்ற தேதி, கிழமை விவரங்கள் இல்லாவிட்டாலும் அவரது சொந்தத் தொகுதியில் உள்ள கிராமத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் இந்தச் சம்பவம் நடந்ததாக செய்தி வட்டாரங்கள் கூறுகின்றன.
இதே ரதாதியா 2012-ம் ஆண்டு நெடுஞ்சாலை வரி வசூல் மையத்தில் துப்பாக்கியை காட்டி சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரதாதியா முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்தார், பிறகு 2014 லோக்சபா தேர்தல்களின் போது பாஜக-வில் இணைந்தார். இவரது மகன் ஜயேஷ் குஜராத் சட்டப்பேரவை உறுப்பினர் என்பதோடு குஜராத் மாநில சுற்றுலாத்துறையின் ஜூனியர் அமைச்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT