Published : 18 Nov 2021 06:36 PM
Last Updated : 18 Nov 2021 06:36 PM

யமுனையில் கழிவுகள் கலக்கும் தொழிற்சாலைகள் மூடப்படும்: கேஜ்ரிவால் அறிவிப்பு

யமுனை நதி | படம்: சுஷில் குமார் வர்மா

புதுடெல்லி

யமுனை நதியை தூய்மைப்படுத்துவதற்காக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் 6 அம்ச செயல் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். அதில் முக்கிய அறிவிப்பாக யமுனையில் கழிவுகள் கலக்கும் தொழிற்சாலைகள் மூடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

டெல்லி நகரில் காற்று மாசு மிகப்பெரிய சவாலாக உள்ளது. டெல்லியை உலுக்கி வரும் காற்று மாசு குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது டெல்லியில் காற்றின் தரம் 379 என்றளவில் மிக மோசமான நிலையில் உள்ளதால் கல்வி நிலையங்கள் விடுமுறை, வாரம் ஒருமுறை வீட்டிலிருந்து ஊழியர்கள் பணி, வார இறுதிகளில் லாக்டவுன் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் பிரிதொரு நடவடிக்கையாக யமுனையை தூய்மைப்படுத்துவதற்காக 6 அம்சத் திட்டம் ஒன்றை கேஜ்ரிவால் அரசுஅறிவித்துள்ளது. டெல்லி நகரின் கழிவுநீர் கால்வாய்களை தூர்வாருதல், புனரமைத்தல் போன்றவற்றையும் உள்ளடக்கி இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அர்விந்த் கேஜ்ரிவால் இன்று கூறியதாவது:

முதற்கட்டமாக கழிவுகளை யமுனையில் வெளியேற்றும் தொழிற்சாலைகள் மூடப்படும்..

அடுத்ததாக நான்கு பெரிய வாய்க்கால்களில் இருந்து யமுனையில் விழும் கழிவுநீரை சுத்திகரிப்புப் பணியில் நிறைய மாற்றங்கள் கொண்டுவரஉள்ளோம்.

இதற்கு அடிப்படையான பணிகளில் முதன்மையானது டெல்லி நகரில் பாதாள சாக்கடையை தூர்வாருதல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் திறனை அதிகரித்தல் போன்றவை.

இதற்கான 6 அம்ச திட்டங்களாவன: 1) பாதாள சாக்கடை சுத்திகரிப்புப் பணியை அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுதல். புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை உருவாக்குதல் 2) தற்போதுள்ள சுத்திகரிப்பு நிலையங்களின் திறனை அதிகரித்தல் 3) மேலும், டெல்லியின் கழிவுநீர் அமைப்பில் தொழில்நுட்ப முன்னேற்றத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் கீழ், பழைய சுத்திகரிப்பு நிலையங்களின் தொழில்நுட்பம் மாற்றப்பட்டு வருகிறது. 4) ஜுக்கி ஜோப்ரியில் இருந்து கழிவுகளை ஆற்றுக்கு பதிலாக கழிவுநீர் இணைப்புகளுடன் இணைக்கவும் டெல்லி அரசுதிட்டமிட்டுள்ளது. 5) சில பகுதிகளில், மக்கள் தங்கள் வீடுகளோடு பாதாள சாக்கடை இணைப்புகளை இணைத்துக் கொள்ளவில்லை. இதுபோன்ற பகுதிகளில் பெயரளவிலானக் கட்டணத்தில் பாதாள சாக்கடை இணைப்புகளை அமைக்கப்படும். 6) கழிவுநீர் கால்வாய்களை தூர்வாருதல், புனரமைத்தல் ஆகியன.

வாக்குறுதி நிறைவேற்றப்படும்

அடுத்த தேர்தலுக்குள் யமுனை நதியை சுத்தம் செய்வோம் என்று நான் தேர்தலின்போது வாக்குறுதி அளித்தேன். அந்த வாக்குறுதியை நிறைவேற்றவே இந்தப் போர்க்காலப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான அனைத்துப் பணிகளையும் தனிப்பட்ட முறையில் நானே கண்காணிக்க முடிவு செய்துள்ளேன்.

கடந்த 70 ஆண்டுகளில் முந்தைய அரசுகளின் அலட்சியத்தால் யமுனை தற்போதைய மோசமான நிலையை எட்டியுள்ளது. இந்த 6 அம்சத் திட்டம் தொடங்கி முழு நதியையும் சுத்தம் செய்வது என்பது 2 நாட்களில் முடிகிற காரியம் இல்லை. இதற்கு சற்று கால அவகாசம் தேவை. எனினும் இந்த ஆறு அம்ச செயல் திட்டம் பிப்ரவரி 2025க்குள் தனது இலக்கை அடையும் என அரசாங்கம் நம்புகிறது.

இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x