Published : 17 Nov 2021 02:31 PM
Last Updated : 17 Nov 2021 02:31 PM
கோவிட் 19 தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மதத் தலைவர்கள் மற்றும் சல்மான் கான் போன்ற பிரபலங்களுடன் மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மகாராஷ்டிர சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோப் புதன்கிழமை தெரிவித்தார்.
கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுவதற்காக இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கியது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் தேதியின்படி, 10,41,16,963 கோவிட் 19 தடுப்பூசிகள் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளன.
இன்று காலை 7 மணி வரை தற்காலிக அறிக்கைகளின்படி, இந்தியாவின் கோவிட் 19 தடுப்பூசி 113.68 கோடியை (1,13,68,79,685) தாண்டியுள்ளது.
இந்தியா முழுவதும் முதல் தவணையே இன்னும் முழுமையாக செலுத்தப்படாத நிலையே உள்ளது. இதனால் சில மாநிலங்களிலும் இப்பணியை மேலும் முடுக்கிவிடுவதற்கான முனைப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
மும்பை மாநகராட்சியில் கடந்த ஜூன் மாதம் மக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பாலிவுட் நடிகர் சல்மான் கான் களமிறக்கப்பட்டார். தற்போது மகாராஷ்டிரா அரசு மீண்டும் மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக சல்மான் கானைப் பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிர அமைச்சர் ராஜேஷ் தோப் ஏஎன்ஐயிடம் கூறியதாவது: ''அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக, தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மதத் தலைவர்கள் மற்றும் பிரபலங்களை நாங்கள் பயன்படுத்த திட்டுமிட்டுள்ளோம். விழிப்புணர்வு இயக்கத்திற்கு சல்மான் கான் போன்ற பிரபலங்களை ஈடுபடுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.''என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT