Published : 17 Nov 2021 12:40 PM
Last Updated : 17 Nov 2021 12:40 PM
டெல்லியில் காற்று மாசு தொடர்பாக தொலைக்காட்சி சேனல்களில் நடைபெறும் விவாதங்கள் அதிக மாசை உருவாக்குகின்றன என உச்ச நீதிமன்றம் கடுமையாக கூறியுள்ளது. நட்சத்திர ஓட்டலில் அமர்ந்து விவசாயிகள் கழிவுகளை எரிப்பதால் அதிக மாசு ஏற்படுவதாக பேசுவது வேதனையானது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முன்பைக் காட்டிலும் டெல்லியில் காற்று மாசின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. பனிக்காலங்களில் காற்றில் மாசுத் துகள்கள் தங்கிவிடுவதால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகின்றனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிப்பதன் மூலம் மீண்டும் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. ஏற்கெனவே வேளாண் அறுவைடைக்கு பிறகு விவசாயிகள் கழிவுகளை எரித்து வரும் நிலையில் தீபாவளி பட்டாசு காரணமாக காற்று மாற்று மேலும் அதிகரித்தது.
இதனால் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்திய பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
காற்று மாசை குறைக்க தண்ணீரை தெளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
டெல்லியை உலுக்கி வரும் காற்று மாசு குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது காற்று மாசை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
டெல்லியில் ஐந்து மற்றும் ஏழு நட்சத்திர ஓட்டல்களில் அமர்ந்திருக்கும் விவசாயிகள் வயல்வெளிகளில் கழிவுகளை எரிப்பது டெல்லியில் மாசு ஏற்படுவதற்கு 30 அல்லது 40 சதவிகிதம் காரணம் என விமர்சிக்கின்றனர். ஆனால் தடை செய்யப்பட்டிருந்தும் பட்டாசுகள் எப்படி வெடிக்கப்படுகின்றன. இந்த தடை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி சேனல்களில் நடைபெறும் இந்த விவாதங்கள் மற்றவற்றை விட அதிக மாசை உருவாக்குகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர்களின் சொந்த விருப்பு வெறுப்புகள் இருக்கின்றன. இதுபோன்ற விவாதங்களில் வெளிப்படுகின்றன.
விவசாயிகள் நிலத்தில் இருந்து பெற்ற வருமானத்தைப் பார்த்தீர்களா. தடையை மீறி பட்டாசு வெடிப்பதை நாங்கள் ஏற்கவில்லை. கண்டிக்கிறோம்.
இவ்வாறு கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT