Last Updated : 17 Nov, 2021 11:26 AM

38  

Published : 17 Nov 2021 11:26 AM
Last Updated : 17 Nov 2021 11:26 AM

இந்திய சுதந்திரத்தைத் தொடர்ந்து மகாத்மா காந்தி குறித்து கங்கனா ரணாவத் சர்ச்சைக் கருத்து

கங்கனா ரணாவத் .

மும்பை

"பிரிட்டிஷ் ஆட்சியின் தொடர்ச்சி தான் காங்கிரஸ் ஆட்சி. மோடி தலைமையில் ஆட்சி அமைந்த 2014ல் தான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்துள்ளது. 1947-ம் ஆண்டு கிடைத்தது வெறும் பிச்சை தான்" என்று இந்திய சுதந்திரத்தைப் பற்றி இழிவான கருத்து தெரிவித்திருந்த கங்கனா ரணாவத் தற்போது தேசத் தந்தை மகாத்மா காந்தி குறித்து சர்ச்சைக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் பிரிவில் சில கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். இதற்காக, 1940ல் வெளியான செய்தித் தாளின் சில பழைய கட்டுரைகளை மேற்கோள் காட்டி தனது கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.

அவரது இஸ்டாகிராம் ஸ்டோரீஸில் இடம்பெற்றிருப்பவை:

நீங்கள் காந்தி ஆதரவாளராக இருக்கலாம். இல்லையேல் நேதாஜியின் ஆதரவாளராக இருக்கலாம். ஆனால், ஒரே நேரத்தில் நீங்கள் இருவரின் ஆதரவாளராகவும் இருக்க முடியாது. எனவே, நீங்கள் சுயமாக முடிவு செய்து யாருக்கு ஆதரவு என்பதைத் தேர்வு செய்யுங்கள்.
அதிகாரப் பசியில் இருந்தவர்கள், மிகவும் தந்திரமாக செயல்பட்டு சுதந்திரப் போராட்ட வீரர்களை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் காட்டிக்கொடுத்து ஒப்படைத்தனர். அத்தகையவர்களுக்கு உண்மையில் அடுக்குமுறையை எதிர்த்துப் போராடும் துணிச்சல் இல்லை.
உங்களின் ஒரு கன்னத்தில் யாரேனும் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டுங்கள், அப்போது தான் சுதந்திரம் கிடைக்கும் எனக் கற்றுக் கொடுத்தவர்கள் நமக்கு சுதந்திரத்தை பிச்சை எடுத்துக் கொடுத்தார். ஆகையால் உங்களுடைய ஹீரோக்களை மதிநுட்பத்துடன் தேர்வு செய்யுங்கள்.

மகாத்மா காந்தி ஒருபோதும், பகத் சிங்கையோ, சுபாஷ் சந்திர போஸையோ ஆதரித்தது இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் நினைவாற்றலில் எல்லா தலைவர்களையும் ஒரே அளவில் சீர்தூக்கி நிறுத்தி அவர்களை அவர்களின் பிறந்த நாளில் நினைவு கூர்வது ஏற்புடையது அல்ல. இது மேம்போக்கானது, பொறுப்பற்ற செயலும் கூட. வரலாற்றையும், உண்மையான வரலாற்று நாயகர்களையும் ஒருவர் தெரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் பதிவிட்டுள்ளார்.

ஏற்கெனவே சுதந்திரம் பற்றிய அவரது மலினமான கருத்தால், அவருக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பல்வேறு தரப்பினரும் கடிதம் எழுதியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x