Published : 15 Nov 2021 01:33 PM
Last Updated : 15 Nov 2021 01:33 PM
வரலாற்றாசிரியர் ஷிவ்ஷாகிர் பாபாசாகேப் புரந்தரே மறைவுக்குப் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, வார்த்தைகளைக் கடந்த வலியுடன் நான் இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவைச் சேரந்த பிரபல வரலாற்றாசிரியர் ஷிவ்ஷாகிர் பாபாசாகேப் புரந்தரே. இவரது இயற்பெயர் பல்வந்த் மொரேஷ்வர் புரந்தரே. மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியைப் பற்றி பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். இந்திய வரலாறு தொடர்பாக பல்வேற ஆராய்ச்சிகள் நடத்தியவர். பிரபலமான ஜண்ட ராஜா நாடகத்தை இவர் எழுதினார்.
2019ஆம் ஆண்டில் இந்தியாவின் 2ஆவது மிக உயரிய விருதான பத்ம விபூஷன் விருது இவருக்கு வழங்கப்பட்டது.
பிரபல வரலாற்று ஆசிரியரும் எழுத்தாளருமான பாபாசாஹேப் புரந்தரே இன்று காலமானார். வயது மூப்பின் காரனமாக சில மாதங்களாகவே அவர் பல்வேறு உடல் உபாதைகளால் சிரமப்பட்டு வந்தார். தீவிர உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட புரந்தரே வென்டிலேட்டர் உதவியுடன் புனேவிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலமானார் (வயது 99).
ஷிவ்ஷாகிர் பாபாசாகேப் புரந்தரே மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
‘‘வார்த்தைகளைக் கடந்த வலியுடன் நான் இருக்கிறேன். வரலாறு மற்றும் கலாச்சார உலகில் மறைந்த ஷிவ்ஷாகிர் பாபாசாகேப் புரந்தரே மிகப் பெரிய வெற்றிடத்தை விட்டுச்சென்றுள்ளார். சத்ரபதி சிவாஜி மகாராஜாவுடன் வரும் தலைமுறைகள் மேலும் இணைப்பைப் பெற்றிருப்பதற்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அவரது பிற பணிகளும் நினைவுகூரப்படும்.
அறிவாற்றலும், சிறந்த ஞானமும் கொண்டிருந்த ஷிவ்ஷாகிர் பாபாசாகேப் புரந்தரே இந்திய வரலாற்றில் வளமான அறிவைப் பெற்றிருந்தார். கடந்த காலங்களில் அவருடன் மிக நெருக்கமாக இருந்து கலந்துரையாடிய பெருமையை நான் பெற்றுள்ளேன். ஒரு சில மாதங்களுக்கு முன் உரையாற்றியுள்ளேன்.
விரிவான அவரது பணிகளால் ஷிவ்ஷாகிர் பாபாசாகேப் புரந்தரே நினைவில் வாழ்ந்திருப்பார். இந்த சோகமான தருணத்தில், அவரது குடும்பத்தினர் மற்றும் எண்ணற்ற ஆதரவாளர்களுக்கு எனது இரங்கல்கள். ஓம் சாந்தி.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT