Published : 13 Nov 2021 07:35 PM
Last Updated : 13 Nov 2021 07:35 PM

டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த ஊரடங்கு: பள்ளிகள் மூடல்; கட்டுமானத்துக்கு தடை - முதல்வர் கேஜ்ரிவால்

தலைநகர் டெல்லியில் மாசுக் கட்டுப்பாடு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதனால் பள்ளிகள் ஒருவாரம் மூடப்படுகிறது.

இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியதாவது:

டெல்லியில் மாசுக் கட்டுப்பாடு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதனால் நவம்பர் 14 ஆம் தேதி முதல் நவம்பர் 17 ஆம் தேதி பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறாது. ஆனாலும், ஆன்லைனில் வகுப்புகள் நடைபெறும்.

நவம்பர் 14 முதல் 17 வரை அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறுத்திவைக்கப்படுகின்றன. ஒருவார காலத்துக்கு அரசு அலுவலர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே பணி புரியலாம். தனியார் நிறுவனங்களும் தங்களின் ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் 427 என்ற அபாயகரமான எல்லையைக் கடந்துள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின்படி பூஜ்ஜியம் முதல் 50 வரையிலான மாசு காற்றின் தரம் உயர்வாக இருப்பதையும், 51 முதல் 100 வரையிலான அளவு காற்றின் தரம் திருப்திகரமாக இருப்பதையும் 101 முதல் 200 மிதமான தரத்தையும், 201 முதல் 300 மோசமான தரத்தையும் 401 முதல் 500 அபாயகரமான தரத்தையும் உணர்த்துகிறது.

முன்னதாக, டெல்லியில் காற்று மாசு ஆபத்தான நிலையை நோக்கிச் செல்வதால், அவசரகால நடவடிக்கையாக டெல்லியில் இரு நாட்கள் லாக்டவுன் கொண்டுவந்து, காற்றின் தரத்தை உயர்த்துவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x