கரோனா தொற்று: சிகிச்சை உள்ளோர் எண்ணிக்கை 1,38,556: கடந்த 266 நாட்களில் இல்லாத அளவு குறைவு
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 13,091 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் கரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,38,556 ஆகக் குறைந்துள்ளது. இது கடந்த 266 நாட்களில் இல்லாத அளவு குறைந்த எண்ணிக்கையாகும்.
குணமடைந்தோர் விகிதம் 98.15% ஆக உள்ளது. இது கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகுஇதுவே அதிகமான அளவாகும் .
கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 13,091
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,44,01,670
இதுவரை குணமடைந்தோர்: 3,37,87,047
குணமடைந்தோர் விகிதம் 98.15%
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 13,878
கரோனா உயிரிழப்புகள்: 462,189
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 340
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 1,38,556
இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 1,10,23,34,225
இதுவரை மொத்தம் 61,99,02,064 கோவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று ஒரு நாளில் கோவிட் பரிசோதனை செய்யப்பட்ட எண்ணிக்கை : 11,89,470
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
