Published : 10 Nov 2021 06:39 PM
Last Updated : 10 Nov 2021 06:39 PM

எத்தனாலுக்கு கூடுதல் விலை; எண்ணெய் நிறுவனங்கள் கொள்முதல் செய்ய வழிமுறை அறிவிப்பு

புதுடெல்லி

கரும்பு பயிரிடும் விவசாயிகள் பயன் பெறும் வண்ணம் பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களால் எத்தனால் கொள்முதல் செய்வதற்கான வழிமுறைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதுகுறித்து பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு தெரிவித்துள்ளதாவது:

எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் கீழ் கரும்பு சார்ந்த பல்வேறு மூலப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்ட எத்தனாலுக்கு அதிக விலையை நிர்ணயிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

எத்தனால் விநியோக வருடம் 2020-21-க்கு (1 டிசம்பர் 2020 முதல் 30 நவம்பர் 2021 வரை) இது பொருந்தும்.

பின்வருவனவற்றிற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது:

(i) சி ஹெவி மொலாசஸ் மூலமாக வரும் எத்தனாலின் விலையை லிட்டருக்கு ரூ 45.69-ல் இருந்து ரூ 46.66 ஆக உயர்த்துவது

(ii) பி ஹெவி மொலாசஸ் மூலமாக வரும் எத்தனாலின் விலையை லிட்டருக்கு ரூ 57.61-ல் இருந்து ரூ 59.08 ஆக உயர்த்துவது

(iii) கரும்புச்சாறு, சர்க்கரை/சர்க்கரை பாகு மூலமாக வரும் எத்தனாலின் விலை லிட்டருக்கு ரூ 62.65-ல் இருந்து ரூ 63.45 ஆக உயர்த்துவது

(iv) கூடுதலாக, ஜிஎஸ்டி மற்றும் போக்குவரத்துக் கட்டணங்களும் செலுத்தப்பட வேண்டும்

(v) நாட்டில் மேம்பட்ட உயிரி எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதற்கு இது உதவும் என்பதால், 2ஜி எத்தனாலுக்கான விலையை நிர்ணயிக்கும் சுதந்திரத்தை எண்ணெய் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என்று அரசு முடிவு செய்துள்ளது. தானியங்களை அடிப்படையாகக் கொண்ட எத்தனால் விலைகள் தற்போது எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களால் மட்டுமே தீர்மானிக்கப்படுகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எத்தனால் சப்ளையர்களுக்கு விலை நிலைத்தன்மை மற்றும் லாபகரமான விலைகளை வழங்குவதில் அரசின் தொடர்ச்சியான கொள்கைக்கு இந்த ஒப்புதல் வலுவூட்டுவதோடு மட்டுமல்லாமல், கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகை, கச்சா எண்ணெய் இறக்குமதியை சார்ந்து இருத்தல் ஆகியவற்றை குறைப்பதோடு, சுற்றுச்சூழலுக்கு நன்மைகளையும் கொண்டு வரும்.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x