Last Updated : 10 Nov, 2021 03:06 AM

2  

Published : 10 Nov 2021 03:06 AM
Last Updated : 10 Nov 2021 03:06 AM

லக்கிம்பூர் கெரி கலவர இடத்தில் சேகரிக்கப்பட்ட தோட்டாக்கள் ஆசிஷ், நண்பரின் துப்பாக்கிகளில் இருந்து வெளியானவை: தடயவியல் ஆய்வு அறிக்கையில் உறுதி

புதுடெல்லி

லக்கிம்பூர் கெரி கலவர இடத்தில் சேகரிக்கப்பட்ட துப்பாக்கி குண்டுகள் மத்திய அமைச்சரின் மகன்ஆசிஷ் மற்றும் அவரது நண்பரின்

துப்பாக்கிகளில் இருந்து வெளியானவை என தடயவியல் ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் கடந்த அக்டோபர் 3-ம் தேதி, விவசாயிகள் மீதுவாகனங்கள் மோதின. இதையடுத்து உருவான கலவரத்தில் துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த சம்பவத்தில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக 20 விவசாயிகள் அளித்த புகாரின் பேரில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் மோனு என்கிற ஆசிஷ் மிஸ்ரா உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 பாஜகவினர் இறந்தது தொடர்பாக அக்கட்சியை சேர்ந்த சுமித் ஜெய்ஸ்வால் அளித்த புகாரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இரு வழக்குகளின் விசாரணையில் தடவியல் ஆய்வாளர்களும் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் அறிக்கைகள் நேற்றுமுதல் வெளிவரத் தொடங்கியுள்ளன. இதில் முதலாவதாக, துப்பாக்கிச்சூடு பற்றி வெளியானஅறிக்கையில் ஆசிஷ் மிஸ்ரா,அச்சம்பவத்தில் இடம் பெற்றிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கி குண்டுகள் ஆசிஷ் மற்றும் அவரது நண்பர் அங்கித் தாஸின் அரசு உரிமம் பெற்ற கைத் துப்பாக்கிகளில் இருந்து வெளியானவை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக இருவரது துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டு தடவியல்ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டி ருந்தன. ஏனென்றால் இந்த சம்பவம் நடந்தபோது தான் அங்கு இல்லை என அமைச்சரின் மகன் ஆசிஷ் தொடர்ந்து மறுத்து வந்தார்.

உ.பி.யின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரித்து வரும் இவ்வழக்கு வேறு மாநி லத்தின் நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமைக்கு மாற உள்ளது. இதற்கு லக்கிம்பூர் வழக்கை கண்காணித்து வரும் உச்ச நீதிமன்றம், அதன் விசார ணையில் உ.பி. அரசு மீது அதிருப்தி தெரிவித்தது காரணமாகியுள்ளது.

இதன் மீது பதிலளிக்க உ.பி. அரசுக்கு நவம்பர் 12 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவத்தின்போது பத்திரி கையாளர் ராமன் காஷ்யப், விவசாயிகள் தாக்குதலில் இறக்கவில்லை எனவும் உ.பி. அரசுஉறுதி செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில், மத்திய அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் வாகனம் மோதியதால் ராமன் உயிரிழந்ததாக உ.பி. அரசு குறிப்பிட்டுள்ளது.

இந்தக் கலவர சம்பவத்தின் இரண்டு வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள 17 பேரும் லக்கிம்பூர் கெரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆசிஷ் உள்ளிட்ட அனைவரின் ஜாமீன் மனுக்களும் நவம்பர் 15-ல் அங்குள்ள நீதி மன்றத்தில் விசாரணைக்கு வர வுள்ளன. எஸ்ஐடி இதுவரை 92 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி அவர்களின் சாட்சியங்களை பதிவு செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x