Published : 09 Nov 2021 07:31 PM
Last Updated : 09 Nov 2021 07:31 PM

புதிய கனிம விதிகள் அறிவிப்பு: சொந்த குத்தகை; 50% விற்பனை செய்ய அனுமதி

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி

புதிய கனிம விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சொந்த குத்தகையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் 50% கனிமத்தை விற்பனை செய்யும் நடைமுறையை புதிய விதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.

கனிம விதிகளில் திருத்தம் செய்து புதிய விதிமுறைகளை மத்திய கனிமங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

சுரங்கத் துறையில் வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டை அதிகரிப்பது, மாநிலங்களுக்கு வருவாயை அதிகரிப்பது, சுரங்கங்களின் உற்பத்தி, கனிம வளங்களின் ஆய்வு மற்றும் ஏலம் ஆகியவற்றின் வேகத்தை மேம்படுத்துவது போன்றவை இந்த நடவடிக்கையின் நோக்கங்கள் ஆகும்.

சொந்த குத்தகையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் 50% கனிமத்தை விற்பனை செய்யும் நடைமுறையை புதிய விதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தத் திருத்தத்தின் மூலம், சொந்த சுரங்கங்களின் திறனை அதிக அளவில் பயன்படுத்தி கூடுதல் கனிமங்களை சந்தையில் வெளியிடுவதற்கு அரசு வழி வகுத்துள்ளது. இதன் மூலம் உற்பத்தி அதிகரிப்பதோடு, விற்பனையும் அதிகரித்து மாநில அரசுகளின் வருவாயை அதிகரிக்கும்.

சுரங்கம் அல்லது கனிமத்தைப் பயன்படுத்தும் போது உருவாகும் கழிவுப் பாறை உள்ளிட்டவற்றை அகற்ற அனுமதிக்கும் ஏற்பாடு விதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.

சுரங்க குத்தகையின் பகுதி சரணடைதல் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அனுமதிக்கப்படுகிறது. தற்போது, வன அனுமதி வழங்கப்படாத பட்சத்தில் மட்டுமே பகுதி சரணடைதல் அனுமதிக்கப்படுகிறது.

தாமத கட்டணங்களுக்கான வட்டி தற்போதுள்ள 24%-லிருந்து 12% ஆக திருத்தப்பட்டுள்ளது. அபராத கட்டணங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

சுரங்க அமைச்சகத்தின் இணையதளத்தில் (www.mines.gov.in) திருத்தப்பட்ட விதி குறித்த அறிவிப்பு கிடைக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x