Published : 08 Nov 2021 09:16 AM
Last Updated : 08 Nov 2021 09:16 AM

எந்த முட்டாள் வாட் வரியை உயர்த்தினார்களோ அவர்கள் குறைக்கட்டும்: எங்களால் முடியாது: மத்திய அரசை சாடிய தெலங்கனா முதல்வர் 

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் | கோப்புப்படம்

ஹைதராபாத்


பெட்ரோல், டீசலுக்கு வாட் வரியைக் குறைக்கக் கூறி எந்த முட்டாள் கூறியது. நாங்கள் இதுவரை வாட் வரியை உயர்த்தவே இல்ைல.எந்த முட்டாள் செஸ் வரியை உயர்த்தினார்களோ அவர்கள் முதலில் குறைக்கட்டும் என்று மத்திய அரசை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கடுமையாகச் சாடினார்.

பெட்ரோல் மீதான உற்பத்தி வரிசை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 10 ரூபாயும் குறைத்து கடந்த 3-ம்தேதி மத்திய அரசு அறிவித்து. கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் முதல் பெட்ரோல் மீது மத்திய அரசு உற்பத்தி வரியாக லிட்டருக்கு ரூ.38.78 உயர்த்தியது, தற்போது அதில் ரூ.5 குறைத்திருக்கிறது. டீசலில் லிட்டருக்கு ரூ.29.03 உயர்த்திவிட்டு ரூ.10 குறைத்துள்ளது.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியைக் குறைத்ததையடுத்து, பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஆனால், பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வாட் வரி குறைக்கப்படவில்லை. மத்திய அரசு உற்பத்தி வரிையக் குறைத்தபின்பும் மாநில அரசுகள் வாட் வரியைக்குறைக்காதது குறித்து பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது.

இது குறித்து தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் நேற்று நிருபர்களுக்குப் ேபட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மாநிலத்தில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை ஒருமுறைகூட பெட்ரோல், டீசலுக்கு வாட் வரியை உயர்த்தவில்லை. அப்படி இருக்கும் போது நாங்கள் ஏன் வாட் வரியை குறைக்க வேண்டும். இதுபோன்று பேசுவதை பாஜக தலைவர்கள் நிறுத்த வேண்டும் மத்தியஅரசு எங்கள் மாநிலத்திலிருந்து நெல் கொள்முதல் செய்ய பாஜக தலைவர்கள் உதவ வேண்டும்.

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் மிகக்குறைவாகவே இருந்து வருகிறது, ஆனால்,மத்திய அரசோ செஸ் வரிஎன்ற பெயரில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி, சாமானிய மக்களுக்கு சுமையை ஏற்படுத்துகிறது.

கடந்த 2014ம் ஆண்டுக்குப்பின் கச்சா எண்ணெய் பேரல் 105 டாலரை தொடவே இல்லை, ஆனால், மத்திய அரசு மட்டும் பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது.

நாங்கள் வாட் வரியை உயர்த்தவில்லை. ஒரு பைசா கூட உயர்த்தவில்லை என்பதால், வரியை குறைப்பதற்கான பேச்சுக்கே இடமில்லை. எந்த முட்டாள் வாட் வரியை குறைக்கக் கூறினார், எந்த முட்டாள் உயர்த்தினார்களோ அந்த முட்டாள் குறைக்கட்டும்.

பெட்ரோல், டீசல் முழுவதற்கும் செஸ் வரியை நீக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன். இந்த வரியை நீக்குவது தேசத்தின் நலனுக்குத்தான். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயராதபோது, மத்தியஅரசு மட்டும் தேவையில்லாமல் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி நடுத்தர மக்களுக்கும், ஏழை மக்களுக்கும் சுமையை அதிகரித்து வருகிறது

ஏழை மக்கள் மீது உண்மையிலே மத்திய அரசுக்கு அக்கறை, கருணை இருந்தால், செஸ் வரியை நீக்கட்டும். பெட்ரோல், டீசல் மீது செஸ் வரியை நீக்கும் வரை தொடர்ந்து நாங்கள் போராடுவோம். செஸ் வரி விதிப்பது சாமானியர்களுக்கு சுமையாக இருக்கும்.

எங்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து , சிறைக்கு அனுப்புவோம் என பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டுகிறார்களே அவர்களுக்கு துணிச்சல் இருந்தால் எங்களை தொட்டுப்பார்க்கட்டும்
இவ்வாறு சந்திரசேகர் ராவ் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x