Published : 05 Nov 2021 05:12 PM
Last Updated : 05 Nov 2021 05:12 PM

டெல்லியை மீண்டும் உலுக்கும் காற்று மாசு; வைகோல் எரிப்பு, பட்டாசு வெடிப்பதால் அதிகரிப்பு

புதுடெல்லி

டெல்லியில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு பிறகு காற்று மாசு தீவிரமான அளவைக் கடந்த நிலையில் தற்போது அபாயகரமான அளவை எட்டியுள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு பின்னான தரவுகளின் அடிப்படையில் தில்லியில் காற்று மாசுபாட்டின் அளவு அபாயகரமான அளவை எட்டியுள்ளது.

டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முன்பைக் காட்டிலும் டெல்லியில் காற்று மாசின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.

பனிக்காலங்களில் காற்றில் மாசுத் துகள்கள் தங்கிவிடுவதால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகின்றனர்.


தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிப்பதன் மூலம் மீண்டும் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. ஏற்கெனவே வேளாண் அறுவைடைக்கு பிறகு விவசாயிகள் கழிவுகளை எரித்து வரும் நிலையில் தீபாவளி பட்டாசு காரணமாக காற்று மாற்று மேலும் அதிகரித்துள்ளது.

பட்டாசு வெடிப்பதற்கு டெல்லி அரசு தடை விதித்திருந்தாலும் நகரின் பல்வேறு பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டுள்ளன. இதனால் ஜன்பாத் பகுதியில் காற்று மாசின் அளவு 655.07 எனும் அளவை எட்டியுள்ளது.

டெல்லியில் காற்றின் தரம் இன்று காலை வரை அபாயகரமான நிலையிலேயே இருந்தது. இதன் காரணமாக, நகரின் வசிக்கும் மக்கள், தங்களது தொண்டை மற்றும் கண்களில் எரிச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

இன்று மதியம் 1 மணி நிலவரப்படி, தலைநகரின் மையபகுதியான லோதி சாலையில் பிஎம் 2.5இன் அளவு 394ஆக பதிவாகியுள்ளது. மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் அதன் அளவு 416ஆகவும் மத்திய டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் 399ஆகவும் பதிவாகியுள்ளது. நேற்று மாலை, நகரின் பெரும்பாலான பகுதிகளில் பிஎம்2.5 அளவு 999ஐ எட்டியது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைக்கப்பட்ட அளவு 25ஆகும்.

டெல்லியில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு பிறகு காற்று மாசு தீவிரமான அளவைக் கடந்த நிலையில் தற்போது அபாயகரமான அளவை எட்டியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x