Published : 03 Nov 2021 01:32 PM
Last Updated : 03 Nov 2021 01:32 PM
2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்லில் ஜெய்ராம் தாக்கூர் தலைமையில் பாஜக செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாடுமுழுவதும் 14 மாநிலங்களில் காலியாக இருந்த மூன்று மக்களவை தொகுதிகள் மற்றும் 29 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.
இதில் காந்தாவா மக்களவை தொகுதியில் பாஜக வென்றது. இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் காங்., வென்றது. தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மக்களவை தொகுதியை சிவசேனா கைபற்றியுள்ளது.
பாஜக ஆளும் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் அனைத்து இடங்களையும் கைப்பற்றியுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், இந்த தேர்தல் முடிவுகள் ஆளும் பாஜகக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
பதேபுர், அர்க்கி, ஜூப்பாய் கோத்காய் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வென்றனர்.
இமாசலப் பிரதேசத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி முதல்வர் ஜெய்ராம் தாக்கூரின் தலைமை மீது கேள்வியை எழுப்பியுள்ளது.
தேர்தல் முடிவுகளுக்கு பணவீக்கம் போன்ற பிரச்சினைகள் காரணம் என தாக்கூர் கூறியுள்ளார். ஆனால் இமாச்சல பிரதேச அரசின் கோவிட் தொடர்பான நடவடிக்கைகள், விலைவாசி உயர்வு, இயற்கை சீற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளில் பொதுமக்களின் கோபத்தைத் தணிக்க முதல்வர் தாக்கூரால் இயலவில்லை என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்த கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:
"பாஜக தோல்விக்கான காரணங்களை சுயபரிசோதனை செய்யும். குறைபாடுகளை களைந்து ஒரு திட்டம் வகுக்கப்படும். 2022-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றியை உறுதி செய்ய முடிந்த அனைத்தையும் கட்சி செய்யும். மாநிலத்தில் கட்சியில் ஏற்பட்டுள்ள கோஷ்டி பூசல் தோல்விக்கு ஒரு காரணம்’’ என்று கூறியுள்ளார்.
தாக்க;ர் சொந்த ஊரான மண்டியில் உள்ள மக்களவைத் தொகுதியைக் கூட பாஜகவால் தக்கவைக்க முடியவில்லை. முன்னாள் முதல்வர், மறைந்த வீரபத்ர சிங்கின் மனைவி பிரதீபா சிங்கிடம் அதை இழந்தார்.
2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்லில் ஜெய்ராம் தாக்கூர் தலைமையில் பாஜக செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தாக்கூரை அக்கட்சியின் முதல்வர் பதவியில் தொடர்ந்து அமர்த்தும் வியூகத்தை மாற்றும் என கருதப்படுகிறது.
டெல்லியைச் சேர்ந்த பாஜக தலைவர் ஒருவர், தேர்தல் முடிவு குறித்து கூறுகையில் ‘‘விலைவாசி உயர்வு என்பது இந்தியா முழுவதும் கவலைக்குரியது. தாக்கூர் பொதுமக்களின் கோபத்தை அளவிட முடியாது. மாற்று கருத்து கட்சிக்குள் இருக்கிறது’’ எனக் கூறினார்.
காங்கிரஸின் 48% வாக்குகளுக்கு எதிராக 28% வாக்குகளை மட்டுமே பாஜக பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT