Published : 01 Nov 2021 03:05 AM
Last Updated : 01 Nov 2021 03:05 AM
இந்தியாவில் சீன பட்டாசுகளுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளதால் அந்நாட்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகையின்போது பொதுமக்கள் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு செலவிடுவர். குறிப்பாக சீன பட்டாசுகள் கணிசமாக இறக்குமதி செய்யப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையின்போது சீன தயாரிப்புகளை புறக்கணிக்க இந்தியர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதனால் சீனாவில் தயாராகும்பட்டாசுகள் மற்றும் மத்தாப்புகளுக்கு உள்ளூர் சந்தையில் வரவேற்பு இருக்காது. இதனால் அந்நாட்டுக்கு ரூ.50ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படும் என இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சிஏஐடி) கணித்துள்ளது.
இந்தியாவில் உள்ள பெருநகர மக்களின் மனப் போக்குபெரிதும் மாறியுள்ளது. குறிப்பாகசீன தயாரிப்புகளை வாங்குவதில்அவர்கள் பெரிதும் அக்கறை காட்டவில்லை. சீன தயாரிப்புகளுக்கு மாற்றாக இந்திய தயாரிப்புகளைஅவர்கள் வாங்கத் தொடங்கியுள்ளனர். 20 பெரு நகரங்களில் தீபாவளிப் பண்டிகைக்கான முன்பதிவு ஏதும் இதுவரையில் இல்லை என்று சிஏஐடி பொதுச் செயலர் பிரவீண் கண்டேல்வால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி, அகமதாபாத், மும்பை, நாகபுரி, ஜெய்ப்பூர், லக்னோ, சண்டிகர், ராய்ப்பூர், புவனேஸ்வரம், கொல்கத்தா, ராஞ்சி, குவாஹாட்டி, பாட்னா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மதுரை, புதுச்சேரி, போபால்மற்றும் ஜம்மு ஆகிய நகரங்கள்இப்பட்டியலில் இடம்பெற் றுள்ளன.
பொதுவாக ராக்கி திருவிழா முதல் புத்தாண்டு வரையிலான ஐந்து மாத காலத்தில் இந்திய வர்த்தகர்கள் ரூ.70 ஆயிரம் கோடி வரையிலான பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வர்.ஆனால் இம்முறை எவ்வித பொருளுக்கும் ஆர்டர் அளிக்கவில்லை. மேலும் விநாயகர் சதுர்த்தியின்போது ரூ.500 கோடி அளவிலான வர்த்தக வாய்ப்புகளும் நின்றுபோனது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டும் இதேபோல சீன தயாரிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டது. இதன் விளைவாக இந்திய வர்த்தகர்கள் சீன தயாரிப்புகளை (பட்டாசுகள், மத்தாப்புகள்) இறக்குமதி செய்வதைக் குறைத்தனர். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT