Published : 26 Oct 2021 04:31 PM
Last Updated : 26 Oct 2021 04:31 PM
ஏஒய். 4.2 என்ற வைரஸ் தற்போது தென்பட்டுள்ளதாக தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
உலக அளவில் தற்போது பிரிட்டன், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஏஒய். 4.2 எனப்படும் டெல்டா பிளஸ் பாதிப்பு, ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல் மற்றும் ரஷ்யாவில் அதிக அளவில் உள்ளது. ஏஒய். 4.2 என்ற புதிய உருமாறிய கரோனா வைரஸ் தற்போது பரவி வருகிறது.
நம் நாட்டில் இரண்டாவது அலை பரவலுக்கு காரணமாக, டெல்டா வகையின் ஒரு பகுதியான இந்த வைரஸ் இருந்தது.
மத்திய பிரதேசத்தின் இந்துாரில் இரண்டு ராணுவ அதிகாரிகள் உட்பட ஏழு பேருக்கு, இந்த புதிய தொற்று உறுதியாகி உள்ளது. இவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர்.
கடந்தாண்டு அக்டோபரில் முதலில் தென்படத் தொடங்கிய பி.1.617.2 எனப்படும் டெல்டா வகை உருமாறிய கரோனா இரண்டாவது அலை பரவலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்நிலையில் இந்த டெல்டா வகை வைரஸ் அடிப்படையில், 55 புதிய உருமாறிய வைரஸ்கள் இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
அதில் ஒன்றான ஏஒய். 4.2 என்ற வைரஸ் தற்போது தென்பட்டுள்ளதாக தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. அண்மையில் புதிய தொற்று தொற்று ஏற்பட்டவர்களிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியபோது இந்த புதிய வகை தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.இந்த புதிய வகை உருமாறிய வைரஸ் எவ்வளவு வேகமாக பரவக்கூடியது என்பது உள்ளிட்ட ஆய்வுகள் நடந்து வருகின்றன.
இந்தநிலையில் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இதுகுறித்து கூறியதாவது:
பிரிட்டனில் கரோனா வைரஸ் நோய் தொற்று எண்ணிக்கையை அதிகரித்ததாக நம்பப்படும் டெல்டா டெல்டா வகை கரோனா வைரஸ் துணை வகையான ஏஒய். 4.2 குறித்து நிபுணர்கள் குழு ஆய்வு செய்து வருகிறது.
ஒரு குழு கோவிட்-19 ஏஒய். 4.2 பற்றி ஆராய்ந்து வருகிறது ... ஐசிஎம்ஆர் உள்ளிட்ட குழுக்கள் வெவ்வேறு வகைகளை பகுப்பாய்வு செய்கின்றன.
உலக சுகாதார நிறுவவனம் ஏஒய். 4.2 டெல்டாவை விட அதிகமாக பரவக்கூடியது என்பதால் அதை ஆராய்ந்து வருவதாகக் கூறியது, இருப்பினும் இது மிகவும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியதாகவோ அல்லது தடுப்பூசிகள் பயனற்றதாக இருந்ததாகவோ எந்த ஆதாரமும் இல்லை
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT