Published : 25 Oct 2021 09:48 PM
Last Updated : 25 Oct 2021 09:48 PM
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் விவசாயி ஒருவர் அழிவுகரமான பூச்சி தாக்குதல்கள் மற்றும் அடிக்கடி ஏற்படும் சூறாவளி புயல்களில் இருந்து தனது முந்திரி தோட்டத்தை பாதுகாப்பதற்காக ஆதரவு வேர்களை உருவாக்குவதற்கான ஒரு புதுமையான நடைமுறையை கொண்டு வந்துள்ளார்.
இந்தியாவில் முந்திரி சாகுபடியின் பரப்பளவு சுமார் 10.11 லட்சம் ஹெக்டேர் ஆகும். உலகின் பிற நாடுகளை விட இது மிக அதிகம். வருடாந்திர மொத்த உற்பத்தி சுமார் 7.53 லட்சம் டன்கள். பல விவசாயிகள் இதை நம்பி வாழ்வாதாரமாக வாழ்கின்றனர்.
இருப்பினும், பல்வேறு உயிரியல் மற்றும் உயிரியல் சாராத காரணிகளால் முந்திரி உற்பத்தி தடைபட்டுள்ளது. தண்டு மற்றும் வேர் துளைப்பான் மிகவும் பலவீனப்படுத்தும் பூச்சிகளில் ஒன்றாகும், ஏனெனில் இது வளர்ந்த மரங்களைக் கூட குறுகிய காலத்தில் அழிக்கும் திறன் கொண்டது.
பூச்சி தாக்குதலைத் தவிர, கடலோர இந்தியாவில் உள்ள முந்திரி தோட்டங்கள் அடிக்கடி ஏற்படும் தீவிர சூறாவளிகளால் பாதிக்கப்படுகின்றன, மேலும், இதுபோன்ற ஒவ்வொரு அழிவையும் மீட்டெடுக்க பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தேவைப்படுகிறது.
இந்த சவால்களை எதிர்கொள்வதற்காக கேரளாவை சேர்ந்த திருமதி அனியம்மா பேபி ஒரு புதுமையான முந்திரி வேர்விடும் முறையை உருவாக்கியுள்ளார். வளர்ந்த முந்திரி மரத்தில் பல வேர்களை இந்த முறை உருவாக்குகிறது, இதனால் உற்பத்தி மேம்படுகிறது. தண்டு மற்றும் வேர் துளைப்பான்கள் மற்றும் சூழலியல் மேலாண்மைக்கு இது உதவுவதோடு, உற்பத்தித்திறனை மீட்டெடுக்கிறது. காற்று சேதம் / சூறாவளி புயல்களுக்கு எதிராக வலுவான பிடிப்பை வழங்குகிறது மற்றும் மீண்டும் நடவு செய்ய வேண்டிய அவசியமின்றி தோட்ட ஆயுளை நீட்டிக்கிறது.
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் தன்னாட்சி பெற்ற அமைப்பான தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளை, இந்த புதுமையான தொழில்நுட்பத்திற்கு தேவையான ஆதரவு மற்றும் அடைகாக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT