Published : 24 Oct 2021 03:09 PM
Last Updated : 24 Oct 2021 03:09 PM
நாட்டில் நாள்தோறும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மத்திய அரசைக் கடுமையாகச் சாடியுள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 5-வது நாளாக எண்ணெய் நிறுவனங்களால் இன்றும் உயர்த்தப்பட்டன. மாநிலத் தலைநகரங்கள் அனைத்திலும் பெட்ரோல் விலை லிட்டர் 100 ரூபாயைக் கடந்துவிட்டது. 12ம் மேற்பட்ட மாநிலங்களில் டீசல் விலை லி்ட்டர் 100 ரூபாக்கும் மேல் அதிகரித்துவிட்டது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நடுத்தர மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். அதிகரித்துவரும் டீசல் விலை உயர்வு சரக்குப் போக்குவரத்துக்கு பெரும்பாதிப்ப ஏற்படுத்தும், அந்த சுமை இறுதியில் நுகர்வோரைச் சென்று சேரும். இந்த எரிபொருள் விலைஏற்றத்தால், சாமானிய மக்கள்தான் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக மத்திய அரசைச் சாடியுள்ளனர். ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ பெட்ரோல் விலை நாள்தோறும் உயர்த்தப்பட்டு, வரிக் கொள்ளை நடக்கிறது. ஏதாவது மாநிலங்களில் தேர்தல் நடந்தால்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வது நிறுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. மக்களுக்கு தொல்லைகள், இடர்கள் கொடுப்பதில் மோடி அரசு சாதனை படைத்துவிட்டது.
மோடிஅரசில் அதிகமான வேலையின்மை, மோடி அரசில் அரசு சொத்துக்கள் அதிகம் விற்பனை, மோடி அரசில் பெட்ரோல் விலை உயர்வு. இந்த ஆண்டில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 23.53 ரூபாய் உயர்ந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “மக்களுக்கு நல்ல காலம் வந்துவிட்டது. பெட்ரோல் விலை இந்த ஆண்டில் மட்டும் லிட்டருக்கு ரூ.23.53 பைசா அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT