Published : 22 Oct 2021 04:48 PM
Last Updated : 22 Oct 2021 04:48 PM
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் தொடர்பான போதைப்பொருள் வழக்கு தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இந்தி நடிகை அனன்யா பாண்டேயிடம் இரண்டாவது நாளாக இன்றும் விசாரனை நடத்தினர். அப்போது போதை மருந்துகளை வழங்கியதாக அல்லது பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை அனன்யா பாண்டே மறுத்ததாக கூறப்படுகிறது.
சொகுசுக் கப்பலில் நடைபெற்ற கேளிக்கை விருந்தில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்த வழக்கில் ஆர்யா கான் கைதான நிலையில், இந்தி நடிகர் ஷாருக்கான் வீட்டிலும், இந்தி நடிகை அனன்யா பாண்டே வீட்டிலும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர்.
மும்பை கடற்பகுதியில் சொகுசுக் கப்பலில் நடைபெற்றகேளிக்கை விருந்தில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக என்சிபிஅமைப்புக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் கடந்த 3-ம் தேதி அந்தக் கப்பலில் என்சிபி அதிகாரிகள் நடத்திய சோதனையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானும் ஒருவர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், 20 பேரை என்சிபி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஆர்யன் கான் தற்போது மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி ஆர்யன் கான் உள்ளிட்டோர் மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த் மனுவும் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, மும்பை ஆர்தர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகன் ஆர்யன் கானை முதல்முறையாக அவரின் தந்தை ஷாருக் கான் இன்று நேரடியாகச் சந்தித்துப் பேசினார்.
இந்த நிலையில் மன்னத் பகுதியில் உள்ள நடிகர் ஷாருக்கான் வீட்டில் சோதனை நடத்தினர்.
இந்தநிலையில் இந்தி நடிகை அனன்யா பாண்டே போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அதன்படி இன்று மாலை அனன்யா பாண்டே போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜாரனார்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் வாட்ஸ்அப் விவாதத்தில் அனன்யா பாண்டே பெயர் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் தொடர்பான போதைப்பொருள் வழக்கு தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அனன்யா பாண்டேயிடம் இரண்டு மணி நேரம் விசாரனை நடத்தினர்.
இந்த வழக்கு தொடர்பாக அவரது அறிக்கையை பதிவு செய்ய நாளை காலை 11 மணிக்கு மீண்டும் அலுவலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது. அதன்படி அனன்யா பாண்டே இன்று மீண்டும் ஆஜரானார். அப்போது அனன்யா பாண்டே ஆர்யா கானுக்கு போதை மருந்துகள் எடுக்க உதவியதாக பேசப்பட்ட வாட்ஸ் ஆப் விவாதங்களை காட்டி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது
அதற்கு அனன்யா பாண்டே போதை மருந்துகளை வழங்கியதாக அல்லது பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்ததாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT