Published : 22 Oct 2021 02:46 PM
Last Updated : 22 Oct 2021 02:46 PM

மும்பையின் 60 மாடி கட்டிடத்தில் தீவிபத்து: 19-வது மாடியில் இருந்து கீழேகுதித்து தப்பிக்க முயன்றவர் அதிர்ச்சி மரணம்

மத்திய மும்பையில் உள்ள ஒன் அவிக்னா பார்க் 60 மாடி கட்டிடத்தில் ஏற்பட்டதீவிபத்து

மும்பை

மும்பையின் 60 மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்திலிருந்து தப்பிக்க முயன்ற 30 வயது நபர் 19 வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய மும்பையின் குரே சாலை பகுதியில் உள்ளது 'ஒன் அவிக்னா பார்க்' எனப் பெயரிடப்பட்ட கட்டிடம். இதில் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. 60 மாடிகள் கொண்ட இக் கட்டிடத்தின் 19 வது மாடியில் திடீரென 11.51 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

கொழுந்துவிட்டெறியும் தீயிலிருந்து தப்பிக்க கட்டிடத்தின் 19 வது மாடியில் இருந்து ஒருவர் குதிப்பதை நேரில் பார்த்தவர்கள் சமூகவலை தளங்களில் பதிவேற்றியுள்ளனர். இக் காட்சி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தக்கூடியதாக உள்ளது.

இது தொடர்பாக ட்வீட்டரில் வெளியான வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.

19 வது மாடியில் ஏற்பட்ட தீவிபத்திலிருந்து குதித்த நபர் அருண் திவாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார், இவர் மும்பை கார்ப்போரேஷன் நடத்தும் கேஇஎம் மருத்துவமனைக்கு இன்று காலை வந்தபோது இறந்துவிட்டதாக மும்பை மாநகராட்சியின் பேரிடர் மேலாண்மை பிரிவு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து மாநகராட்சி மேயர் கிஷோரி பெட்னேகர் சம்பவ இடத்திற்கு விரைந்தார்.

60 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு சேவைகளுக்காவென்று சுமார் 24 வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆரம்பக்கட்ட தகவலின்படி, மும்பை தீயணைப்பு துறையினர் காயங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை என்று கூறியிருந்தனர். தீவிபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x